விளையாட்டு

எங்களுக்குள் எந்த வித பிரச்சினையும் இல்லை - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த வித பிரச்சினையும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

எங்களுக்குள் எந்த வித பிரச்சினையும் இல்லை - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இரவு மும்பையிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது. அதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கோலி, நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், எங்களால் நன்றாக விளையாடியிருக்க முடியாது. ஒருவரை எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதில் நீங்கள் பார்க்கலாம். நான் எப்போதும் ரோகித்தை எப்போதும் பாராட்டியே வந்துள்ளேன். அவர் சிறந்தவர் என்பதை நான் நம்புகிறேன். எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் யார் பயனடைகிறார்கள் எனத் தெரியவில்லை இவ்வாறு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories