விளையாட்டு

தினேஷ் கார்த்திக்குக்கு ஒரு நியாயம்... விராட் கோலிக்கு ஒரு நியாயமா? : கவாஸ்கர் கேள்வி !

விராட் கோலி எவ்வாறு கேப்டனாக மீண்டும் அறிவிக்கப்பட்டார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்குக்கு ஒரு நியாயம்... விராட் கோலிக்கு ஒரு நியாயமா? : கவாஸ்கர் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஒருபக்கம் ரசிகர்கள் சோகமாக இருந்தாலும் மறுபக்கம் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக்குக்கு ஒரு நியாயம்... விராட் கோலிக்கு ஒரு நியாயமா? : கவாஸ்கர் கேள்வி !

இந்திய அணியின் கேப்டன்ஷிப்பை கோலியிடம் இருந்து பறித்து, ரோஹித் சர்மாவிடம் வழங்கவேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவந்தனர். இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித்தும், டெஸ்ட் போட்டிகளுக்குக் கோலியையும் கேப்டனாக நியமிப்பது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் விராட் கோலி எவ்வாறு கேப்டனாக அறிவிக்கப்பட்டார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ''விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்ட போது உலகக்கோப்பை வரை தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்படிக் கூறியதாகத் தான் என் நினைவில் உள்ளது. தற்போது உள்ள இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் வாத்தைப்போல் செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் அவர்கள் விராட் கோலியை எவ்வாறு கேப்டனாக தேர்வு செய்தார்கள் என்று புரியவில்லை.

உலகக்கோப்பையில் சரியாக விளையாடாத தினேஷ் கார்த்திக்கை அணியில் இருந்து நீக்கிவிட்டனர். அதேபோல இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்லாத விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை அவர்கள் பறித்திருக்க வேண்டும். ஆனால், கேப்டன் பதவி குறித்து ஆலோசிக்காமல் மீண்டும் விராட் கோலிக்கே கேப்டன் பதவி வழங்கியுள்ளனர். இது தேர்வுக்குழுவினரின் விருப்பமா அல்லது விராட் கோலியின் தனிப்பட்ட விருப்பமா என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது.

இந்த தேர்வுக்குழுவின் கடைசி அணித் தேர்வாக இது இருக்கும். விரைவில் இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். இனிமேல் அமைக்கும் குழுவானது அணிக்கு ஏற்றவாறு வீரர்களைத் தேர்வு செய்து விளையாட வைக்கும் என்று நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories