விளையாட்டு

“வாய்ப்பு கொடுக்காமல் வெளியே உட்கார வைத்தால் எப்படி திறமையை நிரூபிப்பது ? ”- கேள்வி எழுப்பும் இளம் வீரர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.

“வாய்ப்பு கொடுக்காமல் வெளியே உட்கார வைத்தால் எப்படி திறமையை நிரூபிப்பது ? ”- கேள்வி எழுப்பும் இளம் வீரர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2007ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனாலும் இதுவரை ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து வந்தாலும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், 2019 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு பெறாதது கடினமாகத்தான் இருந்தது. நான் எதையும் நம்பிக்கையாக எடுத்துக் கொள்பவன். அதனால், இவற்றைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளமாட்டேன். உலகக்கோப்பையில் ஆடவேண்டும் என்ற என் கனவு வருங்காலத்தில் நிறைவேறும் என நம்புகிறேன்.

உண்மையான திறமைசாலியாக இருந்தாலும் பெரிய அளவில் தங்களை நிரூபிக்கக் கணிசமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தால் அது ஒருவரின் மனநிலையைப் பாதிக்கும். எனவே திறமைசாலியாக இருந்தாலும், நிரூபிக்கக் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இந்திய 'ஏ' அணியில் விளையாடியதை என்னை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories