விளையாட்டு

இந்தோனேஷியா ஓபன் : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்தோனேஷியா ஓபன் : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இ்ந்தியாவின் பி.வி.சிந்துவும், சீனாவின் சென் யு பெய் மோதினர்.

முதல் சுற்றில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் போட்டி பரபரப்பாக அமைந்தது. முதல் சுற்றின் முடிவில் 21-19 என்ற புள்ளி கணக்கில் பி.வி.சிந்து சுற்றை கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் ஆரம்பத்திலிருந்தே சிந்து ஆக்ரேஷமாக விளையாடியதால் வேகமாக முன்னேறி இரண்டாவது சுற்றை 21-10 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதனையடுத்து இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து , ஜப்பானின் யமாகுஷியும் மோத உள்ளனர்.

banner

Related Stories

Related Stories