விளையாட்டு

“காலத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறேன்” : ஆட்டத்தை மாற்றிய ஓவர் த்ரோ குறித்து ஸ்டோக்ஸ் உருக்கம் !

செமி ஃபைனலில் தோனியை ரன் அவுட் செய்த கப்தில் ஃபைனலில் ரன் அவுட் ஆனதை ஒப்பிட்டு விமர்சித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

“காலத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறேன்” : ஆட்டத்தை மாற்றிய ஓவர் த்ரோ குறித்து ஸ்டோக்ஸ் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், நேற்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரின் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி சார்பில் கப்தில், ஜிம்மி நீஷம் பேட்டிங் செய்ய கடைசி பந்தில் கப்தில் ரன் அவுட்டானார்.

“காலத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறேன்” : ஆட்டத்தை மாற்றிய ஓவர் த்ரோ குறித்து ஸ்டோக்ஸ் உருக்கம் !

இறுதியில் சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகள் டை ஆனதால், பவுண்டரிகளை விளாசிய இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியை அவுட் செய்ய நியூசிலாந்துக்கு உதவியது கப்திலின் த்ரோ. இறுதிப்போட்டியில் அதே த்ரோவால் கோப்பையை தவறவிட்டுள்ளது நியூசிலாந்து அணி.

என்னதான், இங்கிலாந்து கோப்பையை வென்றிருந்தாலும் நியூசிலாந்து அணியின் போட்டித் திறனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயத்தில் செமி ஃபைனலில் தோனியை ரன் அவுட் செய்த கப்தில் ஃபைனலில் ரன் அவுட் ஆனதையும் ஒப்பிட்டு விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

“காலத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறேன்” : ஆட்டத்தை மாற்றிய ஓவர் த்ரோ குறித்து ஸ்டோக்ஸ் உருக்கம் !

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு கடைசி பந்தில் வந்த ஓவர் த்ரோ குறித்து பேசிய நியூஸி., கேப்டன் வில்லியம்சன், விக்கெட் கீப்பரிடம் கப்தில் வீசிய பந்து இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரிக்கு சென்றது வருத்தத்துக்குரிய செயல் என்றார்.

இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து அணி வந்ததற்கு அணி வீரர்களின் உழைப்பு அளப்பரியது. இருந்தாலும் கடைசி பந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து வீரர்கள் இன்னும் மீளவில்லை என்றும் கூறினார்.

இதனையடுத்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ஓவர் த்ரோவில் தான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். இதற்கு வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

“காலத்துக்கும் மன்னிப்புக் கேட்கிறேன்” : ஆட்டத்தை மாற்றிய ஓவர் த்ரோ குறித்து ஸ்டோக்ஸ் உருக்கம் !

பின்னர், இங்கிலாந்தின் கேப்டன் இயான் மார்கன் பேசுகையில், நியூசிலாந்து அணியை கேப்டன் வில்லியம்சன் சிறப்பாகவே வழிநடத்துகிறார் என்று கூறி அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்துக்கு பாராட்டும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories