விளையாட்டு

அந்த ஓவர்த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்த நடுவர்களின் முடிவு பெருந்தவறு: சைமன் டஃபெல் குற்றசாட்டு!

இறுதி ஓவரில் ஓவர்த்ரோ-விற்கு 6 ரன்கள் வழங்க ஆன்-பீல்ட் நடுவர்கள் முடிவு செய்தது தவறு என்று நடுவர் சைமன் டஃபெல் தெரிவித்துள்ளார்.

அந்த ஓவர்த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்த நடுவர்களின் முடிவு பெருந்தவறு: சைமன் டஃபெல் குற்றசாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், நேற்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரின் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்தது. அதனால், சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. இதையடுத்து அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ஓவர்த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்த நடுவர்களின் முடிவு பெருந்தவறு: சைமன் டஃபெல் குற்றசாட்டு!

வெற்றி பெற தகுதி பெற்ற அணியாக நியூசிலாந்து அணி விளையாடியிருந்தது. ஆனால், அன்றையை தினம் நியூசிலாந்துக்கானதாக இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் தோல்விக்கு நடுவரின் தவறான முடிவே காரணம் என நடுவர் சைமன் டஃபல் அதிர்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது 50வது ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் எடுக்க முற்படுவார். இரண்டாவது ரன் ஓடும் போது, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் பந்தை கீப்பரிடம் எறிந்தார். கப்திலின் எறிந்த பந்து கிரீசுக்குள் நுழைய டைவடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பவுண்ட்ரிக்கு சென்றது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 2 + 4 என 6 ரன்கள் வழங்கப்பட்டன ( ஓடியதற்கு 2 ரன்கள் + பவுண்டரி 4 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த ஓவர்த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன.

ஆனால் ஐ.சி.சி விதிமுறையின்படி இதுபோல ஆறு ரன்கள் வழங்கியது தவறு என்று கூறப்படுகிறது. ஸ்டோக்ஸ், இரண்டாவது ரன்னை எடுக்கும்போதுதான் அது ஓவர் த்ரோவாக மாறியது. கப்தில் பந்தை கீப்பர் நோக்கி எறியத் தொடங்கிய போது இரண்டு பேட்ஸ்மேன்களும் இரண்டாவது ரன் எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால், ஒருவரை ஒருவர் கடக்கவில்லை. அப்படி இருக்கும்போது 2-வது ரன்னை நடுவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கக்கூடாது. 1+4 என 5 ரன்களை மட்டுமே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதையும் கணக்கில் கொண்டு 6 ரன்களாக வழங்கியதுதான் ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது. ரன்கள் கொடுத்திருந்தால், அடுத்த பந்தை அதில் ரஷிட் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்திருக்கும் என்று உறுதியாக கூற முடிந்திருக்காது.

அந்த ஓவர்த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்த நடுவர்களின் முடிவு பெருந்தவறு: சைமன் டஃபெல் குற்றசாட்டு!

5 ரன்களுக்கு பதிலாக 6 ரன்கள் வழங்க நடுவர்கள் முடிவு செய்தது பிழை என்று நடுவர் சைமன் டஃபெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ” அந்தப் பரப்பான கட்டத்தில் ஃபீல்டர் பந்தை எறிய முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்திருப்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார்.

ஆனால் டிவி ரீப்ளேவில் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அதில் ரஷித் தான் அடுத்த பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும்.” என்றார்

“எனினும் இந்தத் தவறால் தான் நியூஸிலாந்து தோற்றது, இங்கிலாந்து வென்றது எனக் கூற முடியாது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த ஓவர்த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்த நடுவர்களின் முடிவு பெருந்தவறு: சைமன் டஃபெல் குற்றசாட்டு!

இதுகுறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ஓவர் த்ரோவில் தான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். இதற்கு வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

banner

Related Stories

Related Stories