விளையாட்டு

4 வருடங்களுக்கு முன்பே உலகக்கோப்பை போட்டி முடிவுகளை கணித்த ஆர்ச்சர் : ஜோஃப்ரா ஆர்ச்சரா.. ஜோசியக்காரரா..? 

நிகழப்போவதை முன்கூட்டியே கணித்த ஜோஃப்ரா ஆர்ச்சரை நாஸ்டர்டாமஸ் எனக் கொண்டாடி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

4 வருடங்களுக்கு முன்பே உலகக்கோப்பை போட்டி முடிவுகளை கணித்த ஆர்ச்சர் : ஜோஃப்ரா ஆர்ச்சரா.. ஜோசியக்காரரா..? 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் போட்டி 'டை' ஆனது. வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

'சூப்பர் ஓவரில்' இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங் செய்தார். 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து அணிக்கு உலகக்கோப்பை எனும் நிலையில் 15 ரன்களோடு ஓவர் முடிவுக்கு வந்தது.

போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூலம் ஐரோப்பிய நாடொன்று முதல் முறையாக கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றது.

கடைசி ஓவரில் கூடுதல் ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்த ஜோஃப்ரா ஆர்ச்சர் சில ஆண்டுகளுக்கு முன்பே, இப்போது நிகழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ட்வீட் செய்திருக்கிறார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஒவ்வொரு ட்வீட்டும் அப்படியே இறுதிப்போட்டியில் நிகழ்ந்துகொண்டிருந்தன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவரது அணி இந்த சூழ்நிலையில் இப்படி இருக்கும் என்பது எப்படி அவருக்குத் தெரிந்தது என ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதேபோல, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் ட்வீட் படியே ஆட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆஸி. கேப்டன் ஃபிஞ்ச் டாஸ் வென்றார்; ஃபிஞ்ச் நடையைக் கட்டினார் என முன்கூட்டியே ட்வீட் செய்திருந்தார். அதன்படியே, ஃபிஞ்ச்சின் விக்கெட்டை ஜோஃப்ரா ஆர்ச்சரே வீழ்த்தினார்.

4 வருடங்களுக்கு முன்பே உலகக்கோப்பை போட்டி முடிவுகளை கணித்த ஆர்ச்சர் : ஜோஃப்ரா ஆர்ச்சரா.. ஜோசியக்காரரா..? 

இறுதிப் போட்டியில் ஆட்டத்தை வென்று உலகக்கோப்பையை வெல்ல நியூசிலாந்துக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன, ஆனால் ஆர்ச்சர் 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதையும் முன்கூட்டியே ட்வீட் செய்திருக்கிறார் ஆர்ச்சர்.

நிகழப்போவதை முன்கூட்டியே கணித்த அவரை நாஸ்டர்டாமஸ் எனக் கொண்டாடி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். எல்லா சம்பவத்துக்கும் பொருத்தமான ட்வீட் போட்டிருக்கும் ஆர்ச்சரின் ட்விட்டர் பக்கத்தில் வேறு என்ன அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன என கிளறி வருகிறார்கள்.

அன்றன்றைய நாளில் களத்தில் தீர்மானிக்கப்படும் நிகழ்வுகளையெல்லாம் முன்கூட்டியே ஜோஃப்ரா ஆர்ச்சர் எப்படிக் கணித்தார் என்பது நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்தது, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் மிகச்சிறப்பான இறுதிப் போட்டியை நேற்றிரவு கண்டனர் என்பதுதான்.

banner

Related Stories

Related Stories