விளையாட்டு

உலகக்கோப்பை 2019 : தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மரியாதை - இந்திக்கு no சொன்ன ஐ.சி.சி - சுவாரஸ்ய தகவல் !

தமிழ்மொழியை கவுரவப்படுத்தும் விதமாக ஐ.சி.சி ஒரு செயலை செய்துள்ளது. இது தமிழக ரசிகர்களைப் பெருமைப்பட வைத்துள்ளது.

உலகக்கோப்பை 2019 : தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மரியாதை - இந்திக்கு no சொன்ன ஐ.சி.சி - சுவாரஸ்ய தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு தமிழகத்தில் கிரிக்கெட் மக்களோடு ஒன்றிணைந்துவிட்டது. தமிழகத்தின் சிறு சிறு கிராமங்களில் கூட கிரிக்கெட் விளையாட்டு மிகப் பிரபலம்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில், மற்ற அணிகளைக் காட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழகத்தில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் கொண்டாடப்பட்டது. சென்னை அணியில் விளையாடும் வீரர்கள் மீது தமிழ் மக்கள் காட்டும் அன்பிற்கு அளவில்லை. தமிழ் மக்கள் அன்பினால் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தமிழில் ட்வீட் போட ஆரம்பித்தனர் என்பது மிக முக்கியமான விஷயம்.

உலகக்கோப்பை 2019 : தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மரியாதை - இந்திக்கு no சொன்ன ஐ.சி.சி - சுவாரஸ்ய தகவல் !

தற்போது இங்கிலாந்தில் 2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இன்று உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்நிலையில், நம் தமிழ்மொழியை கவுரவப்படுத்தும் விதமாக ஐ.சி.சி ஒரு செயலை செய்துள்ளது. அது தமிழக ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. அது என்ன தெரியுமா ?

போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணி கேப்டன்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீடியோக்களை சில மொழிகளில் சப் டைட்டில் கொடுத்து வெளியிட்டுள்ளது ஐ.சி.சி.

அதன்படி இரு அணி கேப்டன்கள் பேசும் வீடியோக்களுக்கு தமிழ் மொழியில் சப் டைட்டில் கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது ஐ.சி.சி நிர்வாகம்.

இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு மட்டுமே இடம்பிடித்துள்ளது. இது தமிழ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.சி.சி வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியில் சப் டைட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories