விளையாட்டு

“எங்களது அன்பை வென்றுள்ளீர்கள்” : இந்திய அணிக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

“எங்களது அன்பை வென்றுள்ளீர்கள்” : இந்திய அணிக்கு ராகுல் காந்தி ஆறுதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டி நேற்று இந்தியாவுக்கும் நியூஸுலாந்துக்கும் இடையே இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நேற்று நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்திருந்தது. இதன் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

“எங்களது அன்பை வென்றுள்ளீர்கள்” : இந்திய அணிக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்களின் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டே வந்தபோது, ஜடேஜாவும், தோனியும் சற்று இழுத்துப்பிடித்திருந்தனர். பின்னர் கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழந்து 49.3வது ஓவரில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி.

“எங்களது அன்பை வென்றுள்ளீர்கள்” : இந்திய அணிக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

இதனையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதால் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அதில், அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து நூறு கோடி இதயங்களை இந்திய அணி உடைத்திருந்தாலும், மக்கள் மனதின் அன்பையும் மரியாதையையும் வென்றிருக்கிறது என்றும், வெற்றிக்காக கடுமையாக போராடியது என பதிவிட்டுள்ளார்.

மேலும், சிறப்பாக விளையாடி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories