விளையாட்டு

IndvNz: தோனிக்கு முன் பாண்டியா களம் இறங்கியது சரியா? இந்திய அணியின் தோல்விக்கு 5 காரணங்கள்

பிட்ச், மைதானம், டாப் ஆர்டர் சொதப்பல், பேட்டிங் ஆர்டர் என 5 காரணிகள் இந்திய அணி தோற்பதற்கான மிக முக்கிய காரணங்களாக இருந்தன.

IndvNz: தோனிக்கு முன் பாண்டியா களம் இறங்கியது சரியா? இந்திய அணியின் தோல்விக்கு 5 காரணங்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப்போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா. மழை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசினாலும், இரண்டாம் நாள் பிட்ச்சின் தன்மை, ஷாட் தேர்வு போன்ற விஷயங்கள் இந்தியாவுக்கு நெருக்கடியை தந்தது.

முன்னதாக 50 ஓவர்களில் நியூசிலாந்தை இந்தியா 239 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதன்பின் களமிறங்கிய இந்தியா 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் கோலி, ரோஹித், ராகுல் தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்த தொடரில் 5 சதங்கள் அடித்த ரோஹித் ஒரு ரன்னில் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார், கேப்டன் கோலி போல்ட் பந்தில் ஒரு ரன்னில் எல்பி.டபிள்.யூ ஆனார்.

பின்னர் இறுதி கட்டத்தில் ஜடேஜாவும், தோனியும் வானவேடிக்கை காட்டினாலும் சரியான நேரத்தில் இருவரது விக்கெட்டையும் இழந்தது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

தோல்விக்கு 5 காரணங்கள்:

1. இரண்டு நாட்கள் போட்டி என்பதால், பலவீனமான நியூசிலாந்து சூழலுக்கேற்ப முன்னிலை பெற ஏதுவாக வானிலை அமைந்தது. முன்னாள் வீரர்கள் பலரும் மான்செஸ்டர் பிட்ச்சை குப்பை என விமர்சிக்கும் அளவுக்கு பிட்சின் தன்மை இருந்தது.

2. நியூசிலாந்தை லீக் போட்டிகளில் சந்திக்காமல் போனது முக்கிய காரணம். அந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த போட்டியை ஆடியிருந்தால் நியூசிலாந்தின் அணுகுமுறையை கணித்து கூடுதல் பலத்தோடு இந்தியா விளையாடியிருக்க முடியும்.

3. மிடில் ஆர்டர் மீது தான் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இன்றைய போட்டியில் மிடில ஆர்டர் சிறப்பான பெர்ஃபார்மென்ஸையே கொடுத்திருக்கிறது. ஆனால், இந்திய அணியின் பலமாக பார்க்கப்பட்ட டாப் ஆர்டர் இந்த போட்டியில் நிலைத்து நின்று ஆடாதது மிகப் பெரும் மைனஸ்.

4. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மைதானத்தை தேர்வு செய்தது. அரையிறுதி போன்ற முக்கியமான போட்டிகளை வானிலை பாதிக்காத மைதானத்தில் வைப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.

5. தோனி இறங்க வேண்டிய இடத்தில் பாண்ட்யா இறங்கியது கவனிக்கப்பட வேண்டிய காரணம். டாப் ஆர்டர் முழுவதும் வீழ்ந்த நிலையில், அனுபவம் குறைந்த ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். அந்த இடத்தில் பாண்ட்யாவுக்கு பதில் தோனி களம் இறக்கப்பட்டிருக்கலாம். சவாலான நேரத்தில் தோனியின் அனுபவம் நிச்சயம் கைகொடுத்திருக்கும். தோனியின் அறிவுரை பண்ட்டிற்கு கூடுதல் நம்பிக்கை கொடுத்திருக்கும். பாண்ட்யா இறக்கப்பட்டதால், பண்ட்டின் பங்களிப்பு குறைந்ததோடு, தொடர்ந்து சரிந்து விக்கெட்களால் ஏற்பட்ட அழுத்தத்தை குறைக்கவும் தவறிவிட்டது இந்திய அணி.

இந்தியா, இந்த போட்டியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், இந்த தொடரில் அசைக்க முடியாத அணியாகவே இருந்தது. தோனியின் பொறுப்பான ஆட்டம், பும்ராவின் பந்துவீச்சு, ஜடேஜாவின் க்ளாஸிக் இன்னிங்ஸ், ஃபீல்டிங் என நிறைய தருணங்களை தந்துள்ளது. அரையிறுதியில் தோற்றாலும் 120 கோடி மக்களின் இதயங்களை வென்றது இந்தியா.

banner

Related Stories

Related Stories