விளையாட்டு

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் ? பைனல் போக இத்தனை சிக்கலா ?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதி போட்டி நாளை இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் ? பைனல் போக இத்தனை சிக்கலா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் பங்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

44வது லீக் போட்டியில் இலங்கையுடனான போட்டியில் வென்றதை அடுத்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலில் உள்ளது. இரண்டாவதாக ஆஸ்திரேலியாவும், மூன்று, நான்காவது இடத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணி உள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் ? பைனல் போக இத்தனை சிக்கலா ?

இதில், புள்ளிப்பட்டியலில் முதலில் உள்ள அணி, நான்காவதாக உள்ள அணியுடனும், இரண்டு, மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளும் அரையிறுதியில் போட்டியிட உள்ளன. இதனையடுத்து நாளை இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான அரையிறுதி போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மான்செஸ்டர் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் அரையிறுதி போட்டி இந்திய அணிக்கு ஒரு சிக்கலாகவே அமைந்துள்ளது. ஏற்கெனவே, நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்தானது.

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் ? பைனல் போக இத்தனை சிக்கலா ?

இருப்பினும், மழையின் குறுக்கீட்டால் அரையிறுதி போட்டிக்கு தடை ஏற்பட்டால் 3 வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படலாம்.

மாற்று ஏற்பாடுகள் என்ன ?

அதாவது, மழை பெய்யாத மாற்று நாளில் போட்டி நடத்தப்படலாம், அப்போதும் மழை பெய்தால் சூப்பர் ஓவர் முறையில் போட்டி முடிவு தீர்மானிக்கப்படலாம், சூப்பர் ஓவரிலும் ரன் எடுக்காத நிலை ஏற்பட்டால் புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளது அது இறுதிப்போட்டிக்கு தகுதியானதாக அறிவிக்கப்படும்.

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால் ? பைனல் போக இத்தனை சிக்கலா ?

எனவே இந்திய அணி வீரர்கள் மேற்குறிப்பிட்ட அனைத்து வழிவகைகளுக்கும் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய சூழலுக்கு உட்பட்டுள்ளனர். அரையிறுதி போட்டி இந்திய அணிக்கு பெரும் சவாலாகவே அமையவுள்ளது.

banner

Related Stories

Related Stories