விளையாட்டு

கேக் கட்டிங்..மகளுடன் நடனம்..பாண்டியாவுடன் ஹெலிகாப்டர் ஷாட் : தோனி பிறந்தநாள் அப்டேட்ஸ்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் இடையே தோனி தனது 38வது பிறந்தநாளை தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எவர் கூல் கேப்டனுமான மகேந்திரசிங் தோனியின் 38வது பிறந்தநாளைக் இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து, தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணி நேற்று இலங்கை அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டிக்குப் பிறகு தோனி தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். மிக முக்கியமானவர்கள் மட்டுமே இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

தோனி, அவரது மனைவி சாக்க்ஷி, மகள் ஸிவா ஆகியோருடன் சில நண்பர்கள் மட்டுமே இருந்தனர். இந்திய வீரர்களில் ஹர்திக் பண்டியா, ரிஷப் பந்த் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

தோனிக்காக வைக்கப்பட்டிருந்த கேக்கை, அவரது மகள் ஸிவா வெட்டினார். அதன் பின் தோனியின் முகத்தில் கேக்கை பூசி கொண்டாடினர். அடுத்து தன் மகளுடன் தோனி வித்தியாசமாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஹர்திக் பாண்டியா சமீப காலமாக தோனியின் பிரத்யேகமான ஹெலிகாப்டர் ஷாட் ஸ்டைலில், சிக்ஸர்கள் அடித்து வருகிறார். தோனியை பார்த்து அதை கற்றுக் கொண்ட அவர், நேற்று பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தோனியும், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து ஒரே நேரத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது போல போஸ் கொடுத்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

banner

Related Stories

Related Stories