விளையாட்டு

ரோஹித் ராகுல் அபாரம் : இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

ரோஹித் சர்மா, ராகுலின் அபார ஆட்டத்தால் லீட்ஸில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பைப் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

உலகக்கோப்பை தொடரின் லீட்ஸில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இலங்கை அணி நிரநயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில் மேத்யூஸ் அதிகபட்சமாக 111 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா , கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்த்து 189 ரன்கள் சேர்த்தனர். நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது 5-வது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். 103 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேறினார்.

பின்னர் ராகுல் உலகக்கோப்பையில் தனது முதல் சத்தத்தை பதிவு செய்தார். பின்னர் ராகுல் 111, ரிஷப் பந்த் 4 ரன்களுக்கு வெளியேறினர். இதனையடுத்து விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததால் 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.

இந்திய அணி முதலிடத்தைப் பிடித்ததால், வரும் செவ்வாய்கிழமை மான்செஸ்டர், ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் நடக்கும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது.

banner

Latest Stories

Related Stories

Related Stories