விளையாட்டு

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 

உலகக்கோப்பையில் நேற்று நடைப்பெற்ற லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தினர்.

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை தொடரின் லீட்ஸில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 3 விக்கெட் இழப்பில் 43.3 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தினர்.

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 

இந்தப் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சதமடித்தார். இந்த சதத்தின் மூலம், இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

* ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 647 ரன்களை குவித்துள்ளார். தகுதிச் சுற்றில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும். மேலும், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச ரன்கள் பட்டியலில் 647 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்

சச்சின் டெண்டுல்கர் - 673 ரன்கள் (2003)

மேத்யு ஹைடன் - 659 ரன்கள் (2007)

ரோகித் சர்மா - 647 ரன்கள் (2019)

* ஒரு உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் ரோகித் சர்மா.

ரோஹித் சர்மா – 5 சதங்கள் (2019)

குமார் சங்கக்காரா – 4 சதங்கள் (2015)

* உலகக்கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் 3 முறை சதங்களை விளாசிய ஒரே பேட்ஸ்மேன் ரோகித் சர்மா.

* உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா – 6 சதங்கள் (16 போட்டிகளில்)

சச்சின் டெண்டுல்கர் – 6 சதங்கள் (44 போட்டிகளில்)

ரிக்கி பாண்டிங் – 5 சதங்கள் (42 போட்டிகளில்)

குமார் சங்கக்காரா – 5 சதங்கள் (35 போட்டிகளில்)

* உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று சதங்களை விளாசிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா. இதற்குமுன், 2015 உலகக்கோப்பை தொடரில் குமார் சங்கக்காரா தொடர்ந்து 3 சதங்களை உலகக்கோப்பையில் முதன்முதலாக விளாசினார்.

* இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இதுவரை 4 ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார். உலகக்கோப்பையில் ஒரே தொடரில், அதிக ஆட்டநாயகன் விருது வாங்கிய பட்டியலில் இணைந்துள்ளார்.

அரவிந்த டி சில்வா (1996),

லான்ஸ் க்ளூசனர் (1999)

யுவராஜ் சிங் (2011)

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 

தொடக்க விக்கெட்டிற்கு ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் 189 ரன்களை இப்போட்டியில் குவித்தனர். இதுவே, உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் ஆகும்.

189 ரன்கள் – கே எல் ராகுல் மற்றும் ரோஹித் (vs இலங்கை) – 2019

180 ரன்கள் – கே எல் ராகுல் மற்றும் ரோஹித் (vs வங்கதேசம்) – 2019

174 ரன்கள் – ரோஹித் மற்றும் தவான் (vs அயர்லாந்து) – 2015

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி மொத்தமாக 1029 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பையில் 1000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த 3வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சச்சின் டெண்டுல்கர் - 2273 ரன்கள்

சவ்ரவ் கங்குலி - 1006 ரன்கள்

விராட் கோலி - 1029 ரன்கள்ள

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 

ஜஸ்பிரித் பும்ரா நேற்றைய போட்டியில் தனது 100 ஒருநாள் விக்கெட்டுகளை நிறைவு செய்தார். இதன்மூலம் அதிவேக 100 ஓ.டி.ஐ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 9வது இடத்தையும் பிடித்துள்ளார். அதிவேக 100 ஓ.டி.ஐ விக்கெட்டுகளை 56 போட்டிகளில் முகமது ஷமி வீழ்த்தி முதல் இந்திய பௌலராக உள்ளார்.

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 

இந்திய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் இனைந்து 29 ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதற்கு முன் நயன் மோங்கியா (விக்கெட் கீப்பர்) மற்றும் வெங்கடேஷ் பிரசாத் (பௌலர்) ஆகியோர் இனைந்து 28 ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

உலகக்கோப்பை 2019 : ரோஹித் என்னும் புதிய ரன் மெஷின் - இந்தியா நிகழ்த்திய மேஜிக் சாதனைகள் ! 

இலங்கை வீரர் லசித் மலிங்கா நேற்றய போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். மலிங்கா தனது உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தம் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது வீரராக மலிங்கா இனைந்துள்ளார்.

மெக்ராத் 71 விக்கெட் விக்கெட்கள்

முத்தையா முரளிதரன் 68 விக்கெட்கள்

மலிங்கா 56 விக்கெட்கள்

banner

Related Stories

Related Stories