விளையாட்டு

உலகக்கோப்பை 2019 : காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் ! மாற்று வீரர் யார் ?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து இருந்து விலகியுள்ளார்.

உலகக்கோப்பை 2019 : காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் ! மாற்று வீரர் யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது. இந்திய அணி வீரர் ஷிகர் தவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப் பட்டார்.

உலகக்கோப்பை 2019 : காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் ! மாற்று வீரர் யார் ?

இந்திய அணி பேட்டிங் செய்த போது நாதன் குல்டர் நைல் வீசிய பந்தில் தவானின் இடது கை பெருவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்தோடு பேட் செய்து ஷிகர் தவான் சதம் அடித்தார்.

இந்திய அணி பீல்டிங் செய்தபோது தவானுக்கு பதில் ஜடேஜாதான் பீல்டிங் செய்தார். போட்டியின் இரண்டாம் பாகம் முழுக்க தவான் ஓய்வு தான் எடுத்தார்.

இதையடுத்து இன்று அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. பெருவிரலில் காயம் ஏற்றபட்டுள்ளதால் அவர் 3 வாரம் ஓய்வு எடுக்க பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக ஷிகர் தவான் உலககோப்பையிலிருந்து விலகியுள்ளார். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது அம்பத்தி ராயுடு சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories