விளையாட்டு

மீண்டும் விளையாட முடிவெடுத்த டிவில்லியர்ஸ் : மறுத்த தென்னாபிரிக்க நிர்வாகம் !

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஓய்வு பெற்றுள்ள டிவில்லியர்ஸ் முன் வந்ததாகவும், ஆனால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் விளையாட முடிவெடுத்த டிவில்லியர்ஸ் : மறுத்த தென்னாபிரிக்க நிர்வாகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 30ம் தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்துள்ளது. இன்னும் ஒரு தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணிக்காக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஓய்வு பெற்றுள்ள டிவில்லியர்ஸ் முன் வந்ததாகவும், ஆனால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியை அறிவிப்பதற்கு முதல் நாள் டிவில்லியர்ஸ் தன் விருப்பத்தை, கேப்டன் டுபிளசி, பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சன், தேர்வுக் குழு தலைவர் லிண்டா ஆகியோரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அணி நிர்வாகம் அதை மறுத்து விட்டதாக தெரிகிறது. டிவில்லியர்ஸ் அணியில் இல்லாத நேரத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களை இது அவமானப்படுத்தும் விதமாக இருக்கும் என்று நிர்வாகிகள் கருதியதால் தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தென்னாப்பிரிக்காவை கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டி வில்லியர்சுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிடுவதால், 360 டிகிரி என செல்லமாக அழைக்கப்படுவார் டிவில்லியர்ஸ். ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8765 ரன்கள் எடுத்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள டிவில்லியர்ஸ் 9577 ரன்களை குவித்துள்ளார். 78 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 1672 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

banner

Related Stories

Related Stories