விளையாட்டு

உலக கோப்பை 2019 : வெஸ்ட் இண்டீசின் பவர் ஹிட்டர்ஸை சமாளிக்குமா பாகிஸ்தான் ?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

உலக கோப்பை 2019 : வெஸ்ட் இண்டீசின் பவர் ஹிட்டர்ஸை சமாளிக்குமா பாகிஸ்தான் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் அணி தான் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. அத்துடன் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. பாபர் அசாம், பஹார் ஜமான், இமாம் உல்-ஹக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது அமிர், ஷதப் கான், ஆசிப் அலி ஆகியோர் சரியான பங்களிப்பை அளிப்பார்கள் எனலாம்.

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்ததுடன் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களும், ஆல்-ரவுண்டர்களும் அதிகம் இருக்கிறார்கள். அந்த அணியின் பந்து வீச்சு பக்க நன்றாக அமைந்து விட்டால் அந்த அணி வலுவான அணிக்கும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த இரு அணிகளும், இதுவரை 133 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அவற்றுள் 70 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸும், 60 போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றுள்ளது. உலகக் கோப்பையில் மோதிய 9 போட்டிகளின் ரெக்கார்டு, 6-3 என வெஸ்ட் இண்டீஸே முன்னிலை வகிக்கிறது.

banner

Related Stories

Related Stories