விளையாட்டு

ஐ.பி.எல் வெற்றியை யாருக்கு பரிசளிக்கிறார் ரோஹித் சர்மா?

ஐ.பி.எல் இறுதிப்போட்டி வெற்றிக்குப் பின்னர் மும்பை அணி கேப்டன் ரோஹித்தை அவரது மனைவி ரித்திகா பேட்டியெடுத்தார்.

ஐ.பி.எல் வெற்றியை யாருக்கு பரிசளிக்கிறார் ரோஹித் சர்மா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி வாகை சூடியது. மும்பை அணி வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மும்பை அணி கேப்டன் ரோஹித்தை அவரது மனைவி ரித்திகா பேட்டியெடுத்தார்.

4-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றதை மகள் சமைராவுக்கு சமர்ப்பிக்கிறீர்களா? என ரோஹித் சர்மாவிடம் ரித்திகா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரோஹித், சமைராவுக்கு மட்டுமல்ல உனக்காகவும் இந்த வெற்றியை பரிசளிக்கிறேன் என்றார். மேலும், மகளின் வருகைக்கு பின்னரான எப்போதும் நினைவுகூரத்தக்க வெற்றி இது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ரோஹித், கடைசி ஓவரில் தனது இதயத்துடிப்பு படபடவென அடித்துக் கொண்டதாக கூறினார். மேலும், கடந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் உதவியாக இருந்ததாகவும், இந்த முறை ஜான்சனின் இடத்தை லஸித் மலிங்கா நிரப்பியதாகவும் ரோஹித் புகழாரம் சூட்டினார்.

banner

Related Stories

Related Stories