விளையாட்டு

IPL 2019 : டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

IPL 2019 : டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சாஹர் வீசிய பந்தில் பிருத்வி ஷா எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். ஷிகர் தவான் 18 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். முன்ரோ, 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும், அக்சர் பட்டேல் 3 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட் எடுத்தார்.டெல்லி அணியில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் களமிறங்கினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் வாட்சனும் 50 ரன் இருக்கும் போது அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 109 ரன்னாக இருந்தது.

அடுத்து வந்த ரெய்னாவும், ராயுடுவும் ஜோடி சேர்ந்து ஆடினர். ரெய்னா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக வந்த டோனி 9 ரன்னில் வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், ஐபிஎல் வரலாற்றில் எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மேலும் இந்த வெற்றியின் மூலம், சென்னை அணி ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகளை பதிவு செய்தது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் தலா மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி உள்ளன.

banner

Related Stories

Related Stories