விளையாட்டு

IPL 2019 : சென்னை அணியை பழிவாங்குமா டெல்லி அணி! 

ஐ.பி.எல். தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

IPL 2019 : சென்னை அணியை பழிவாங்குமா டெல்லி அணி! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

12-வது ஐ.பி.எல். தொடரில், லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு (புதன்கிழமை) நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

காய்ச்சல் காரணமாக சென்னை அணியின் கேப்டன் டோனி மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் இல்லாததால் சென்னை அணி மும்பைக்கு எதிராக 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இன்றைய ஆட்டத்திற்கு டோனி களம் திரும்புவாரா? என்பது சந்தேகம் தான்.

2 நாட்களாக அவர் பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. ‘டோனி உடல்நலம் தேறி வருகிறார். ஆனால் டெல்லிக்கு எதிராக அவர் ஆடுவாரா? இல்லையா? என்பது குறித்து போட்டிக்கு முன்பு தான் முடிவு செய்யப்படும்’ என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார். டோனி குணமடையாவிட்டால் விக்கெட் கீப்பராக ஜெகதீசன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. கேப்டன் பொறுப்பை சுரேஷ் ரெய்னா கவனிப்பார்.

தற்போது புள்ளி பட்டியலில் 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டலாம். ஆனால் சென்னை அணியின் ரன் ரேட் மோசமான நிலையில் (ரன்ரேட் -0.113) இருப்பதால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அது கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

டெல்லி அணி இந்த சீசனில் மிகப்பெரிய எழுச்சி பெற்று இருக்கிறது. 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள டெல்லி அணி 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு வந்துள்ளது.

ஷிகர் தவான் (5 அரைசதத்துடன் 451 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷப் பன்ட் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். பந்து வீச்சில் ககிசோ ரபாடா (25 விக்கெட்) மிரட்டுகிறார். ஏற்கனவே சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க டெல்லி வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். அதே சமயம் உள்ளூர் சூழலில் ஆடும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும். அதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது முரளிவிஜய், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி அல்லது ஜெகதீசன் , கேதர் ஜாதவ், டுவெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்.

டெல்லி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, அக்‌ஷர் பட்டேல், லாமிச்சன்னே, அமித் மிஸ்ரா, ரபடா, இஷாந்த் ஷர்மா.

banner

Related Stories

Related Stories