விளையாட்டு

“தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நவீன்” - மு.க.ஸ்டாலின் பாராட்டு!

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் நவீனுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நவீன்” - மு.க.ஸ்டாலின் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் நவீன், 3 தங்கப் பதக்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்று தாயகம் திரும்பிய நவீனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்திய நவீன் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர். இவர் 83 கிலோ எடைப்பிரிவில் வெவ்வேறு பிரிவு போட்டிகளில் 3 தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

நவீனுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது,

“ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் 83 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் புகழும், பெருமையும் தேடித்தந்துள்ள பளுதூக்கும் வீரர் நவீன் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த நவீன், 83 கிலோ எடைப்பிரிவில் 3 தங்கப் பதக்கங்களும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றிருப்பது அரிய சாதனை. தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்துள்ள அவர், மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories