விளையாட்டு

மீண்டும் தோல்வி; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 

இதோடு 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது ஆர்.சி.பி

மீண்டும் தோல்வி; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 
பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது RCB
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடரில் இன்று நடந்த 46-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஷ்ரேயஸ் 52, தவான் 50 ரன்கள் எடுத்தனர். ஆர்.சி.பியின் பந்து வீச்சு பெரிதாக சோபிக்கவில்லை.

188 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்.சி.பி அணியால் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 39 ரன்கள் எடுத்தார். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

மீண்டும் தோல்வி; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 

இதோடு 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது ஆர்.சி.பி. இதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது அந்த அணி. லீக் சுற்றோடு இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறுகிறது.

மறு முனையில் இது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 8-வது வெற்றி. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது அந்த அணி. அதுமட்டுமல்ல பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories