விளையாட்டு

IPL 2019 : பெங்களூருக்கு பதிலடி கொடுக்குமா பஞ்சாப் அணி? 

ஐ.பி.எல் தொடரில் இன்றிரவு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் போட்டியில் , விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

IPL 2019 : பெங்களூருக்கு பதிலடி கொடுக்குமா பஞ்சாப் அணி? 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடரில் இன்றிரவு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் போட்டியில் , விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை மீண்டும் தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பஞ்சாப் அணி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories