விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி!  

ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான்அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.

ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி!  
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியும் மோதின.ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் சந்தீப் லாமிச்சன்னே நீக்கப்பட்டு கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். 2-வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (0) ரபடாவால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டு வெளியேறினார்.இதனை அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஸ்டீவன் சுமித் இணை 130 ரன்கள் திரட்டியது
2-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஸ்டீவன் சுமித் இணை 130 ரன்கள் திரட்டியது

ரஹானே அடிக்கடி பவுண்டரி விளாசியதுடன், அவ்வப்போது சிக்சரும் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. ரஹானே 32 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அரை சதத்தை தொட்ட ஸ்டீவன் சுமித் அடுத்த பந்திலேயே கிறிஸ் மோரிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஸ்டீவன் சுமித் இணை 130 ரன்கள் திரட்டியது.

ரஹானே
ரஹானே

அதிரடியாக ஆடிய ரஹானே 17-வது ஓவரில் சதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இதுவாகும். ஐ.பி.எல். போட்டியில் ரஹானே அடித்த 2-வது சதம் இது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

ரஹானே 63 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 54 ரன்னும் , கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 42 ரன்னும் (39 பந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரூதர்போர்டு 11 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷப் பன்ட் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்னும், காலின் இங்ராம் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

11-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். ரஹானே அடித்த சதம் ராஜஸ்தான் அணிக்கு பலன் அளிக்காமல் வீணானது.ராஜஸ்தான் அணி தரப்பில் ஷ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும்,ரியன் பராக்,குல்கர்னி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories