விளையாட்டு

IPL 2019 ; பஞ்சாபை பழிதீர்க்குமா ராஜஸ்தான் அணி !

ஐ.பி.எல் தொடரில் இன்றிரவு 8 மணிக்கு மொஹாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

IPL 2019 ; பஞ்சாபை பழிதீர்க்குமா ராஜஸ்தான் அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடரில் இன்றிரவு 8 மணிக்கு மொஹாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.இவ்விரு அணிகளும் ஏற்கனவே மோதிய போது ஜாஸ் பட்லரை அவுட்டாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பஞ்சாப் அணி விளையாடிய கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிறிஸ் கெய்ல் & கே.எல்.ராகுல்
கிறிஸ் கெய்ல் & கே.எல்.ராகுல்

இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை விளாசிய டேவிட் வார்னரின் ரன்களை(400) முந்த கே.எல்.ராகுலுக்கு அதிக வாய்ப்புள்ளது. கடந்த சில போட்டிகளில் அசுர வேகத்தில் ரன்கள் சேர்க்க துவங்கும் பஞ்சாப் அணி, மிடில் ஓவர்களில் மந்தமாக ரன்கள் சேர்த்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையை இன்று மாற்ற வேண்டியது அவசியம்.

ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

பட்லர்
பட்லர்

அதே நேரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரையில், அந்த அணியின் பட்லர் மிரட்டல் பார்மில் உள்ளது மிகப்பெரிய பலம். சொந்த் மண்ணில் அடுத்ததடுத்த போட்டியில் பங்கேற்கும் முன்பாக இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியல் முன்னேற முயற்சிக்கும்.

banner

Related Stories

Related Stories