விளையாட்டு

ஐ.பி.எல் 2019; முதல் வெற்றியை பெறப் போவது யார்? RcbvsRr 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் போட்டி அன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்றது. 

RCB vs RR
RCB vs RR
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 14வது போட்டி ஏப்ரல் 2 அன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இவ்வருட ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டிகளில் கூட இவ்விரு அணிகளும் வெற்றி பெறவில்லை. எனவே இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தங்களது முதல் வெற்றியை இப்போட்டியில் பதிவு செய்யும்.

இதுவரை இரு அணிகளும் 17 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 2018 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணிக்கு எதிரான இரு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore

பெங்களூரு அணி 2019 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. மோசமான ஆட்டத்திறனால் தடுமாறி வரும் பெங்களூரு அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Virat Kohli& Ab Devilliers
Virat Kohli& Ab Devilliers

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை பொறுத்த வரை ஏபி டிவில்லியர்ஸ், கேப்டன் விராட் கோலி ஆகியோரையே பெரிதும் நம்பியுள்ளது.பௌலிங்கில் யுஜ்வேந்திர சகாலின் பௌலிங் மட்டுமே இந்த சீசனில் சிறப்பாக உள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னரான இவர் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முன்னணி நட்சத்திர வீரராக உள்ளார்.

உத்தேச XI:

பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), மொய்ன் அலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், சிவம் தூபே, காலின் டி கிரான்ட் ஹாம்/ டிம் சௌதி/ நாதன் குல்டர் நில், பிரயாஸ் பார்மன், யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்/ வாஷிங்டன் சுந்தர்.

Rajasthan Royals
Rajasthan Royals

ராஜஸ்தான் அணி வலிமையாக இருந்தாலும் இதுவரை சிறப்பாக விளையாடிய போதும் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது ராஜஸ்தான் அணி. எனவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்யும் என தெரிகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் மிகுந்த வலிமையான அணியாக திகழ்கிறது. ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே, சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.பவுலிங்கை பொறுத்த வரை ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்

உத்தேச XI:

அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித், ராகுல் திர்பாதி, பென் ஸ்டோக்ஸ், தவால் குல்கர்னி, ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால்,கிருஷ்னப்பா கௌதம், வரூன் ஆரோன்.

banner

Related Stories

Related Stories