அரசியல்

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ கைது! - 119 நாட்களுக்கு பிறகு நடவடிக்கை!

தொடர் அழுத்தத்திற்கு பிறகு, இன்று (நவ.27) கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ கைது! - 119 நாட்களுக்கு பிறகு நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 119 நாட்களுக்கு முன்பே, இது குறித்து கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் புகாரளித்த நிலையில், நடவடிக்கை எடுப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ கைது! - 119 நாட்களுக்கு பிறகு நடவடிக்கை!

இதனைத் தொடர்ந்து நவ.9 அன்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இச்செய்தியை பொதுவெளியில் வெளியிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் கண்டனங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரிடமே சென்று புகாரளித்தார்.

இத்தகைய தொடர் அழுத்தத்திற்கு பிறகு, இன்று (நவ.27) கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்.

banner

Related Stories

Related Stories