
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தலைமையில் அகில இந்திய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு நேரில் சந்தித்து இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கான சாதிவாரிக் கணக்கெடுப்புக்கோரிய போராட்டத்திற்கு ஆதரவளிக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (நவ.23) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் (All India Federation for Social Justice) ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் அவர்கள் தலைமையில், “அகில இந்திய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு”வின் (All India Caste Census Coordination Committee) பிரதிநிதிகள் குழு, நேரில் சந்தித்து, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கைக்கும் நவ.28 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் ஆதரவு கோரி, கோரிக்கை மனு அளித்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த ஒருங்கிணைப்புக் குழுவினர் விவரம் பின்வருமாறு :

பேராசிரியர் சூரஜ் மண்டல், டெல்லி பல்கலைக்கழகம் (பி. பி. மண்டல் அவர்களின் பேரன்)
ஸ்ரீனிவாஸ் கௌட், முன்னாள் அமைச்சர், தெலங்கானா
ஜே.என்ஜீரப்பா – கர்நாடக மாநில OBC கூட்டமைப்பு.
ரத்ன சபாபதி – இதர பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்கான கட்சி (Party for the Rights of OBCs).
உமேஷ் கொர்ரம் – சகல் OBC மஹாமோர்ச்சா, நாக்பூர்.
முனைவர் ஜி.கிரண் குமார் – அகில இந்திய OBC மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர்.
சந்தோஷ் யாதவ் – வழக்கறிஞர், லக்னோ உயர்நீதிமன்றம்; சமூக சேத்னா அறக்கட்டளை (NYAS) மாநிலச் செயலாளர்.
மகேந்திர குமார் மண்டல் – வழக்கறிஞர், லக்னோ உயர்நீதிமன்றம்; சமூக சேத்னா அறக்கட்டளை (NYAS) பொதுச் செயலாளர்.
சஷாங்க் ரத்னூ – உச்சநீதிமன்ற வழக்கறிஞர்.
ராகேஷ் தத்தா – அகில இந்திய OBC மாணவர் சங்கம்.
ரஜினிகாந்த் கவுட் – அகில இந்திய OBC மாணவர் சங்கம்.
பி.ஜெயந்த் யாதவ் – அகில இந்திய OBC மாணவர் சங்கம்.






