அரசியல்

கேடுகெட்ட தவெக ஆட்சிக்கு இது தலை தீபாவளி.. தமிழ்நாட்டு மக்களுக்கு கொலை தீபாவளி.! : திமுக கடும் கண்டனம்!

கொலைகளை செய்தியாக்கும் ஊடக நிறுவனங்களுக்கு போன் செய்து செய்தியாக்காமல் தடுக்கும் வேகம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை, என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கேடுகெட்ட தவெக ஆட்சிக்கு இது தலை தீபாவளி.. தமிழ்நாட்டு மக்களுக்கு கொலை தீபாவளி.! : திமுக கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவ.08) தீபாவளி நாளில் மட்டும் 11-க்கும் மேற்பட்ட கொலைச்சம்பவங்கள் அரங்கேறி, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள திமுக தலைமைக் கழகம்,

தவெக ஆட்சியின் கொ** தீபாவளி!

பண்டிகை நாட்களைக் கூட மக்கள் நிம்மதியாக கொண்டாட முடியாத படி தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்கு தீபாவளி நாளில் ஒரு காவலர் உட்பட 11க்கு மேற்பட்ட கொ*லைகள் நடந்துள்ளதே சாட்சியாக உள்ளது.

ரீல்ஸ் சிஎம் ஆள்கிறார் என்பதால் தறி கெட்டு அலையும் கூட்டம் சாலையிலேயே ரீல்ஸ் எடுக்க, அதை தட்டிக்கேட்ட தேனி சிறப்பு எஸ்ஐ வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். கடலூரில் ஒரு கூட்டத்தால் நான்கைந்து காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத போது பொது மக்களின் நிலை என்ன? நேற்று மட்டும் ஒரே நாளில் ஒன்பது கொ*கள். 18 வயது இளைஞன் தொடங்கி வயது வித்தியாசமின்றி அனைவரும் குரூரமான முறையில் கொ*ல்லப்பட்டுள்ளனர்

கொ*களை செய்தியாக்கும் ஊடக நிறுவனங்களுக்கு போன் செய்து செய்தியாக்காமல் தடுக்கும் வேகம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை.

மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

கேடுகெட்ட ஆட்சிக்கு இது தலை தீபாவளி. தமிழ்நாட்டு மக்களுக்கு கொ* தீபாவளி, என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories