அரசியல்

“பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம்” : தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவ.08) ஒரே நாளில் அரங்கேறிய கொலை சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தவெக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம்” : தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டு மக்களுக்கு தீபாவளி நாளான நேற்று (நவ.08) பெரும் சோகமாகவும், அதிர்ச்சிகரமான நாளாகவும் அமைந்தது என்றுதான் கூறவேண்டும். அந்தளவிற்கு மாநிலம் முழுவதும் கொலை சம்பவங்கள் நடந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சாலையை மறித்து பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரே கொலை செய்யப்பட்டத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இதுகுறித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.

“பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம்” : தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்!

Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.

கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.

ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?

தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories