
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ.05) திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
கடந்த 2 நாட்களுக்கு முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க போவதாக மக்கள் காத்திருந்த நிலையில், எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை.
ஜோசியர் சொன்னதற்காக மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கூட்ட அலுவலகத்தில் முதலமைச்சரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எந்த புதிய திட்டங்களில் அறிவிக்கவில்லை. முதலமைச்சர் வாய் பேசாமல் அமைதியாக சென்ற நிகழ்ச்சியாக அரசு நிகழ்ச்சி அமைந்தது.
அன்றைய தினம் புதுக்கோட்டையில் கலைஞர் மகளிர் அறிவியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடக்க இருந்தது. மாணவ-மாணவிகள் விஜயை வந்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே செமஸ்டர் தேர்வுகள் மறு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் மன்னார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. ஒரு கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. மற்றொரு கல்லூரியில் முதலமைச்சரை பார்ப்பதற்காக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, மறு புறம் புதிய பேருந்து நிலையம் திறக்க சென்றார் முதலமைச்சர். புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அங்கும் மக்களுக்கு ஏமாற்றம் தான். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்ததில் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 கோடி ரூபாயில் பேரிகார்டுகள் அமைத்து பொதுமக்களின் பணம் வீணாக்கப்பட்டது. இதை தவிர எந்தவித சம்பவங்களும் புதுக்கோட்டையில் நடக்கவில்லை. முதலமைச்சர் விஜயின் புதுக்கோட்டை விசிட் ஃபெயிலியர் (Failure) விசிட். அந்த மாவட்ட மக்களை ஏமாற்றிய விசிட்.
விராலிமலையில் தேர்தலுக்காக வரவில்லை என்று சொல்கிறார் முதலமைச்சர் விஜய். விராலிமலையில் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை. யார் வேட்பாளர் என்றும் தெரியாது. ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளி என்ற சொல்லி பொது மக்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் சில்வர் டம்ளர், டிபன் பாக்ஸ் என ரூ.2000 மதிப்பிலான பொருட்களை முதல் கட்டமாக கொடுத்திருக்கிறார். இதுதான் தூய்மையான ஆட்சியின் லட்சணம்.
நாங்கள் ஓட்டுக்கு எதுவும் கொடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு விஜயபாஸ்கர் 90 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு வீடு தவறாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு ரொக்கமாக பணம் கொடுக்கிறார். தேர்தல் வருவதற்கு முன்பே பணம் கொடுக்கிறார்கள் என்றால் தேர்தல் வரும் போது எவ்வளவு கூடி கொட்டி கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
விராலிமலை தேர்தலுக்காக இப்போதே பணம், பொருள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த வித திட்டங்களையும் வழங்காமல் அந்த மாவட்டத்திற்கு வந்து சென்று இருக்கிறார் முதலமைச்சர் ப்ரோ விஜய்.

பிரம்மாண்ட பந்தல் போட்டும் எந்தவித நிகழ்ச்சியும் நடக்காத நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி. ஜோதிடர் சொன்னதற்காக அந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் நடத்தும் இடங்களுக்கு சென்று முதலமைச்சர் செல்கிறார் அங்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறார் என்றால் ஓட்டுக்காக தான். ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார்.
ஆனால் மக்கள் நலத்திட்ட உதவிகள் வாங்குவதைவிட அன்றாடம் தாங்கள் பாதிக்கப்படுவதைதான் பெரிதாக கருதுகிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசு தடுமாறுகிறது. பால் கிடைக்காமல் தடுமாறுகிறது. கிடைத்தாலும் அதிக விலைக்கு கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு எல்லா பொருட்களின் விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளி மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு எல்லாம் விலை ஏறி இருக்கிறதே தவிர மக்களுக்கு வாங்கும் சக்தியும் கிடையாது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கடைகள் அடைக்கப்பட்டது, அவர்கள் தாங்களாக அடைக்கவில்லை. பல இடங்களில் காவல்துறையினர் அடைக்க வற்புறுத்தியுள்ளனர்." என்றார்.






