அரசியல்

“இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது Drugs வெற்றிக் கழகமா?” : இ.பரந்தாமன் கேள்வி!

“முதலமைச்சர் அவர்களே... போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். உங்களுக்கும் மகன் உண்டு, எனக்கும் உண்டு. இளைஞர்களை வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாக பார்க்காமல், மகன்/மகளாக பாருங்கள்.”

“இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது Drugs வெற்றிக் கழகமா?” : இ.பரந்தாமன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாகை மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி பூபாலன் வீட்டில் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து, இன்று (அக்.19) செய்தியாளர்களை சந்தித்து, தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் தெரிவித்ததாவது,

“நாகை மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகியிடம் 137 கிலோ மெத் போ*ப் பொருள் சிக்கி மூன்று நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால், இதுவரை இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் வாய்திறந்து பேசவில்லை. மாநில அரசு என்று ஒன்று இருக்கிறதா? தமிழ்நாட்டின் காவல்துறை தூங்குகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

த.வெ.க ஆட்சியில் ரூ.264 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள 65 படைகளுடன்கூடிய போ*ப்பொருள் தடுப்பு அதிரடிப்படை (Anti-Narcotics Task Force) என்ன செய்கிறது? ஒதுக்கிய நிதியை செலவு செய்தீர்களா? இந்த அதிரடிப்படை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?

“இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது Drugs வெற்றிக் கழகமா?” : இ.பரந்தாமன் கேள்வி!

தமிழ்நாட்டில் 137 கிலோ மெத் போ*ப்பொருள் சிக்கியுள்ளது குறித்து ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டும், அது குறித்து அச்சு ஊடகங்களில் எந்த செய்தியும் இடம்பெறவில்லை. இதர ஊடகங்களும் இதனை பெரிதுபடுத்தவில்லை.

நான் நாகரிகமான இயக்கத்தைச் சேர்ந்தவன். எனவே, போ*ப்பொருள் விற்பனையில் கிடைத்த பணமெல்லாம் த.வெ.க.விற்கு வந்ததா? அதனை வைத்து இடைத்தேர்தலுக்கு த.வெ.க செலவு செய்ததா? என்பதான கேள்விகளை நான் எழுப்பவில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் போதைக் கடத்தல் விவகாரங்களில் த.வெ.க.வினர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.

உதாரணத்திற்கு, த.வெ.க நிர்வாகியான அமைச்சர் சரத் பயன்படுத்திய சந்தேகத்திற்குரிய பொருள்.

திருப்பூரில் த.வெ.க நிர்வாகி பெரியசாமியிடம் 100 கிலோ க*சா பறிமுதல்.

“இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது Drugs வெற்றிக் கழகமா?” : இ.பரந்தாமன் கேள்வி!

ஈரோட்டில் த.வெ.க நிர்வாகி அருணிடம் 140 கிலோ குட்கா பறிமுதல்.

சங்ககிரியில் த.வெ.க நிர்வாகி பூபதியிடம் 12.5 கிலோ க*சா பறிமுதல்.

வண்ணாரப்பேட்டையில் வீட்டு மாடியிலேயே க*சா செடி வளர்த்த த.வெ.க நிர்வாகி எட்வின் ராஜ்.

ஆகஸ்ட் மாதம் மெத், க*சா பறிமுதல் செய்யப்பட்டு, 6 த.வெ.க நிர்வாகிகள் கைது.

மதுரையில் கு*கா தொடர்புடைய த.வெ.க நிர்வாகி காசிநாதன் கைது.

அ.தி.மு.க.வின் கு*கா பாஸ்கரை, தற்போது த.வெ.க.வில் இணைத்துள்ளனர்.

அனைத்திற்கும் உச்சமாக 137 கிலோ மெத் போ*ப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இப்படி, தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் த.வெ.க.வினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது Drugs வெற்றிக் கழகமா?

முதலமைச்சர் அவர்களே, போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். உங்களுக்கும் மகன் உண்டு, எனக்கும் உண்டு. இளைஞர்களை வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாக பார்க்காமல், மகன்/மகளாக பாருங்கள்.”

banner

Related Stories

Related Stories