அரசியல்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!

“‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா? இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தி.மு.க ஆட்சியில் நிறைவுற்ற வடபழனி - பூவிருந்தவல்லி மெட்ரோ சேவை திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தங்களது சாதனைகள் போல் சித்தரிக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, இன்றைக்கு கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்துவைத்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, தி.மு.க ஆட்சியிலேயே ரூ.290 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த மாபெரும் நூலகத்தை இன்று (அக்.16) முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

இப்படியான சூழலில், தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இந்த நூலகத்தில், தி.மு.க ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட இளைஞர் நலன் சார்ந்த ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்பான அமைப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடி மறைத்துள்ளது த.வெ.க அரசு.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!

இதனைக் கண்டித்து, தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.

வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள்.

இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?

‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?

இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?

கழக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது - திட்டங்களை Cancel செய்வது - Cancel செய்தவற்றையே Cancel செய்து U-Turn அடிப்பது என்று Circus நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த Dummy முதலமைச்சர் நடத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories