அரசியல்

“மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறது த.வெ.க அரசு?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

ரூ.5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ரூ.35 செலவழித்து வாங்கும் த.வெ.க அரசின் நிர்வாகத்தைக் கண்டித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவு.

“மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறது த.வெ.க அரசு?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் மாற்றத்தைத் தருகிறோம் என பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க, தற்போது எளிய மக்களின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கும் வகையில், ஏமாற்றத்தை மட்டுமே அளித்து வருகிறது. மாநில அளவில் ஏற்கனவே, மின்வெட்டு சிக்கல் தலைவிரித்தாடும் வேளையில், மின்கட்டணம் மேலும் கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து, தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு பின்வருமாறு,

“தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற த.வெ.க அரசு 2026 மே 23-ல், முந்தைய தி.மு.க அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்!

அதே த.வெ.க அரசு 2026 ஜூன் 25-ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது.

ஆனால், 2026 அக்டோபர் 12-ல், ஒரு யூனிட் ரூ.37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தி.மு.க ஆட்சியில் வெறும் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?

செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ரூ.16 முதல் ரூ.20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது.

தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?

“மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறது த.வெ.க அரசு?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திறமையான திராவிட மாடல் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல் மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன!

இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?

மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை!

தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ரூ.3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்!

மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்?

மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட முடியுமா?”

banner

Related Stories

Related Stories