அரசியல்

கோவையில் பரபரப்பு.. காவல்நிலையத்திற்கு தவெக கட்சிக் கொடி கட்டி வந்த கார்.. காவலர்கள் மீதும் தாக்குதல்!

கோவை , சூலூர் காவல்நிலையத்தில் கணவர் - மனைவி பிரச்சனையில், காவல்நிலையத்திற்கு வந்த பெண் வீட்டார் தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கணவர் வீட்டார், காவலர்கள் மீதும் கொலை வெறித் தாக்குதல்

கோவையில் பரபரப்பு.. காவல்நிலையத்திற்கு தவெக கட்சிக் கொடி கட்டி வந்த கார்.. காவலர்கள் மீதும் தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ராம் பிரசாத் (29), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் நிலக்கரிச்சல் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, மனைவியின் புகைப்படங்களை ராம் பிரசாத் சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பகிர்ந்ததாகக் கூறி, சண்முகப்பிரியா சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக ராம் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது, நிலக்கரிச்சல் பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகக் கொடி கட்டிய காரில் வந்த சண்முகப்பிரியாவின் குடும்பத்தினர், காரில் இருந்து இறங்கியதும் நேரடியாக ராம் பிரசாத் இருந்த பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலைத் தாங்க முடியாமல் ராம் பிரசாத் அலறித் துடித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக்காவலர் பாலமுருகன் மற்றும் பெண் காவலர் பிரியா ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ராம் பிரசாத்தை மீட்க முயன்றனர். அப்போது தாக்குதலில் தவெக பிரமுகர்கள் கும்பல், காவலர்களையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கும்பலிடம் இருந்து ராம் பிரசாத்தை மீட்ட காவலர்கள், அவரைக் காவல் நிலையத்திற்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, தாக்குதலைத் தடுக்கச் சென்றதில் காயமடைந்த தலைமைக்காவலர் பாலமுருகன் மற்றும் பெண் காவலர் பிரியா ஆகியோர் சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலில் இருந்த சண்முகப்பிரியா காவல் நிலையத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குடும்பப் பிரச்சினை தொடர்பான புகாரில் விசாரணைக்காக காவல் நிலையம் வந்த இளைஞர் மீது, காவல் நிலைய வளாகத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தடுக்கச் சென்ற காவலர்களும் தாக்கப்பட்ட சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories