அரசியல்

“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தாலும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர் கதையாகியுள்ளது.

“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சட்டம் ஒழுங்கு என்றால் எவ்வளவு கிலோ எனக் கேட்கும் நிலைதான் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு ஒரு மாதம் கழித்து ஏற்கனவே இருக்கும் பெண் காவலர்களுக்கு துறை ரீதியாக காவலர்களுக்கான உடையை மற்றும் புதிதாக மாற்றி, ஏற்கனவே இருக்கும் காவல் வாகனங்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதனை திட்டமாக தொடங்கி வைத்தார்.

ஆனால், இந்தத் திட்டம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என மக்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனால், நிலைமையோ தலைகீழாக உள்ளது என்பதே நிதர்சனம். இந்தப்படைக்கு குற்றவாளிகளை பிடித்து அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைப்பது மட்டும்தான் வேலையாம். அவர்களுக்கு மாற்றாக வேறு எந்த அதிகாரமும் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டம் குறித்தான ஒரு குறிப்பை பார்த்தோம் என்றால், ஜூன் 6ம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நடைபெற்றது. அதன் பிறகு நடந்த பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை ஒன்றும் குறைந்தபாடில்லை.

"சில செய்திகளை கேட்டல் மனசு பதறுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமையில் ஜீரோ டாலரன்ஸ்” என முதலமைச்சர் விஜய் பேசினார். அதன்பின் நடந்த சம்பவங்கள் தான் கீழுள்ளவை.

ஜூன் 11-ம் தேதி நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.

ஜூன் 12-ம் தேதி - சென்னை எம்.கே.பி. நகர் அருகே பைக் டாக்ஸியில் சென்ற மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.

சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தவெக நிர்வாகி வேம்புலி.

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.

“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”

ஜூன் 13-ம் தேதி திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தலைமை காவலர் அக்னிமுத்து.

ஜூன் 13-ம் தேதி சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.

ஜூன் 14-ம் தேதி தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு போதகரால் பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 11 வயது சிறுமிக்கு உறவினரால் பாலியல் தொல்லை

ஜூன் 15-ம் தேதி கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஜூன் 15-ம் தேதி பூந்தமல்லி அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை

ஜூன் 15-ம் தேதி திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுநரால் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

ஜூன் 15-ம் தேதி சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.

ஜூன் 15-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை

இதுதான் தமிழ்நாட்டின் தற்போதை பெண் பாதுகாப்பு, குழந்தைகள் சிறுமிகள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கின் நிலைமையாக உள்ளது என்பதை மக்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாமே தனி மனித ஒழுக்கம் என முதலமைச்சர் கடந்து சென்றுவிடுவார். அதை மக்களும் புரிந்து கொண்டார்கள். ஆனால், அதற்காக எதுவுமே முதல் 6 மாதங்களுக்கு கேட்கக் கூடாது என ஆளும் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அனுதாபிகளும் பேசுவதை பார்த்தால் வேடிக்கையாகத் தான் உள்ளது.

முதலமைச்சர் கார் ஓட்டினார், செஸ் விளையாண்டார் என்பது மட்டுமே நிலைமையை சீராக்கிவிடுமா என்பதே தற்போது மக்களுக்கு எழும் கேள்வியாக உள்ளது.

banner

Related Stories

Related Stories