அரசியல்

“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!

திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம்!

“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநில அளவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவை தலைதூக்கி வருகின்றன.

“இவை மக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அமைந்துள்ளது” என எதிர்க்கட்சியினர் கண்டனங்களை முன்வைக்கும் போது, அதற்கு பொறுப்பேற்று பதிலளிக்காமல் அலட்சியமாக “எல்லாத்தையும் நீங்கள் செய்துவிட்டு, என் மீது ஏன் பழிப்போடுகிறீர்கள்” என அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிப்பது மிகுந்த ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், த.வெ.க அரசின் அலட்சியப் போக்கிற்கு இடையே, திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!

இதற்கு வருத்தம் தெரிவித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“திருச்சியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.”

banner

Related Stories

Related Stories