அரசியல்

“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.2.2026) சென்னையில், INDIA TODAY சார்பில் நடைபெற்ற TAMIL NADU ROUND TABLE நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அளித்த பேட்டி.

“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.2.2026) சென்னையில், INDIA TODAY சார்பில் நடைபெற்ற
TAMIL NADU ROUND TABLE நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,
அளித்த பேட்டி விவரம் பின்வருமாறு,

கேள்வி - Confidence is coming from the schemes that you have brought in place, the welfare schemes, the fact that you said Tamil Nadu is now No.1 when it comes to growth rate. Is there a Dravidian Model 2.0 that you are bringing?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – Absolutely! No doubt!

கேள்வி – கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியங்களுடைய திட்டங்களைச் சொல்லி அதன் மூலமாக நீங்கள் வாக்குகளை கேட்கிறீர்களா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – Definitely. எங்கள் திட்டங்களை சொல்லிதான் நாங்கள் வாக்குகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் திட்டங்களும் முழுவதுமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதனால், கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. 

கேள்வி - Are you worried about your opponents at all? Who is your main opponent? 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – எத்தனை கூட்டணி வைத்தாலும் சரி, இந்த திமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற முடியாது. நாங்கள் எதிர்பார்ப்பது 200. அதையும் தாண்டிதான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

கேள்வி – 2021 தேர்தலை விட இந்த தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – இல்லை, கண்டிப்பாக ஸ்வீப் செய்யப் போகிறோம். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. 

“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!

கேள்வி - You are saying you will do better in 2026 than you did in 2021? 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – 2021-இல் செய்யப் போகிறோம் என்று சொல்லி வாக்கு கேட்டு வந்தோம். நிறைய சாதனைகளை தற்போது செய்திருக்கிறோம். செய்திருப்பதை சொல்லி இப்போது ஓட்டு கேட்கப் போகிறோம். அதனால், கண்டிப்பாக அதைவிட அதிகமாக தான் வாக்குகள் பெறுவோம்.

கேள்வி – கலைஞர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தந்தையிடம் கற்றுக்கொண்டது என்ன? உங்கள் மகனிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – கலைஞரிடம் கற்றுக்கொண்டது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அவரிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முடியும். உழைப்பை மட்டும் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த உழைப்பு தான் என்னுடைய மகன் உதயநிதிக்கும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படிதான் வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். 

கேள்வி - ஒரு நல்ல பொலிட்டிஷியனாக இருக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு மட்டும் தான் வேண்டுமா? 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – நிச்சயம் உழைப்பு தான். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால்தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும். எதையாவது எதிர்பார்த்து அரசியலுக்கு வந்து உழைத்தோம் என்றால் முடியாது. யார் காலில் ஆவது விழுந்து அதனால் முன்னுக்கு வருவது என்பது நடக்காது. உழைத்தால் தான் முன்னுக்கு வர முடியும். அப்படி உழைத்துத் தான் நான் வந்திருக்கிறேன். 

கேள்வி – திராவிடக் கொள்கை உங்கள் அரசியலுக்கு எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – பெரியாருடைய கொள்கை, அதைத் தொடர்ந்து அண்ணாவுடைய இலட்சியம், கலைஞருடைய பாதை, இதுதான் எனக்கு முக்கியம். அதனால், திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். 

கேள்வி – ராகுல்காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், உங்களுக்குமான  உறவு குறித்து?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் - ராகுலைப் பொறுத்தவரைக்கும் அரசியலைத் தாண்டி, ஒரு மூத்த சகோதரராக என்னைப் பார்க்கிறார். நானும் அவரை சகோதரராகத்தான் பார்க்கிறேன். அரசியலைத்தாண்டி சொல்கிறேன். குடும்பத்தில் ஒருவர் போன்று என்னை அவர் கருதுகிறார். நானும் அப்படிதான் கருதுகிறேன்.

“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!

கேள்வி - திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இந்த தேர்தலில் இருக்குமா? 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் -  நிச்சயமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது போன்று இல்லை. உங்களைப் போன்ற மீடியாக்கள் செய்யும் பிம்பங்கள். நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

கேள்வி – ஆட்சியில் பங்கு குறித்து...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – அது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். அது இடையில் சில பேர் கிளப்பிவிடும் பிரச்சினை. கூட்டணியில் ஏதேனும் முறிவு ஏற்படுமா.. என்று திட்டமிட்டு சதி செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. அவரும் கவலைப் படவில்லை.

கேள்வி - எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். ஒன்றிய அரசிடமிருந்து உங்களுக்கு வரவேண்டிய நிதிகள் ஏதும் வரப்பெறவில்லை? அது குறித்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – நிதி வரவில்லையென்றாலும் அதை சமாளித்து  தமிழ்நாடு இன்றைக்கு முதலிடத்திற்கு வந்திருக்கும் அளவிற்கு சூழலை உருவாக்கியிருக்கிறோம். அதற்காக போராடுகிறோம். வாதாடுகிறோம். போராட்டங்கள் நடத்துகிறோம்.

ஆர்பாட்டங்கள் நடத்துகிறோம். நாளை கூட இதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருக்கிறோம். அதனால், எங்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டுதான் இருப்போம். அதற்காக எங்களுடைய பணிகளை விட்டுவிடமாட்டோம். அதையும் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் எங்களுடைய திறமை. எங்கள் ஆட்சியின் திறமை.

கேள்வி -  ஒன்றிய அரசிற்கும் – பிரதமர் மோடி அவர்களுக்கும் –  உங்களுக்குமான உறவு குறித்து?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் – தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம். அந்த பாலிசி தான் எங்களுக்கு உண்டு.

banner

Related Stories

Related Stories