அரசியல்

"தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !

"தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (31-10-2025)

தலைவரின் கட்டளை!

‘என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து நடைபெற்ற பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையானது ‘கட்டளை’ உரையாக அமைந்திருந்தது.

“இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம்” என்பதை முன்னுரையாகச் சொல்லி, தொண்டர்களின் உழைப்பால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை இயக்கம் வெற்றி பெற்றதைச் சுட்டிக் காட்டினார். இரண்டு கோடிப் பேர் கழகத்தில் புதிய உறுப்பினர்களாகச் சேர்ந்திருப்பது சாதாரணமான சாதனை அல்ல. அந்தச் சாதனையை நிகழ்த்தியவர்கள் கழக உடன்பிறப்புகள்தான் என்று அவர்களுக்கு மகுடம் சூட்டினார். ‘சல்யூட்’ அடித்தார்.

ஐந்து முறை கழகம் ஆட்சியில் இருந்துள்ளது. ஆறாவது முறையும் ஆட்சியில் அமர்த்திய பெருமை கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும். 2019 ஆம் ஆண்டு முதல் அவர் எதிர்கொண்ட தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்று வருகிறார்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றியைப் பெற்றுத் தந்தார். அத்தகைய வெற்றியை நோக்கிய பயணமாகத்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் அமைந்துள்ளது.

"தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !

‘வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு’ என்ற இலக்கை தனக்குத் தானே வைத்துக் கொண்டு இயங்கி வருகிறார் தலைவர். அந்த இலக்கு நோக்கி தொண்டர்களையும் அழைத்துச் செல்கிறார் தலைவர். ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் உன்னிப்பாகக் கவனித்து அத்தனை பேர் வாக்குகளையும் கழகக் கூட்டணிக்குத் திருப்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

“2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். ஏழாவது முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தது – திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடங்கியது என்ற வெற்றிச் செய்திதான் நமது காதில் விழப் போகிறது. மமதையால் சொல்லவில்லை. அடுத்த முறையும் தி.மு.க.தான் ஆட்சியில் அமையும் என்று நான் சொல்வது – என்னருமை உடன்பிறப்புகளான உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் சொல்கிறேன். தி.மு.க.வை யாராலும் தோற்கடிக்க முடியாது என்றால் – தி.மு.க. தொண்டனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்பதுதான் அதன் பொருள்” என்று அவரது சொற்கள் ஒவ்வொன்றும் உற்சாகச் சொற்களாக மட்டுமல்ல, உண்மைச் சொற்களாகவும் அமைந்துள்ளன.

கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் களத்தில் ஆற்றும் பணி, வேறு எந்த இயக்கத்தாலும் நெருங்க முடியாத பணியாக அமையும். “உதயசூரியன்தான் வேட்பாளர், தலைவர்தான் வேட்பாளர்” என்ற இலக்குடன் கழகத் தொண்டர்கள் பணியாற்றுவார்கள். எந்த விதமான திசை திருப்பலுக்கும் இடமில்லாத வகையில் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கிப் பயணித்து வெற்றியைப் பெறுவார்கள். அதனால்தான் தொண்டர்கள் மீது நம்பிக்கையை வைத்து, தனது வெற்றியின் இலக்கை தலைவர் குறிக்கிறார்.

கடந்த நான்கரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் போய் சேர்ந்துவிட்டது. ஒவ்வொரு தனி மனிதரின் கோரிக்கையையும் எண்ணத்தையும் நிறைவேற்றிக் கொடுத்து வருகிறார் முதலமைச்சர். பயன்பெற்ற மக்கள் தங்களது நன்றியை வாக்குகளாகச் செலுத்தத் தயாராகி வருகிறார்கள்.

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக – ஒன்றிய பா.ஜ.க. அரசின் புள்ளிவிபரங்களின்படி தமிழ்நாட்டை உயர்த்திய சாதனையைச் செய்தது யார்? திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னால் தரப்பட்ட வாக்குறுதிகள் 505. அதில் 404 வாக்குறுதிகளை நான்கரை ஆண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனையைச் செய்தது யார்?

திராவிட மாடல் அரசுதான் செய்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடு ஆகிவிட்டது. இந்தியாவில் இத்தகைய சாதனையை எந்த அரசும் செய்ததில்லை என்ற வகையில் சாதனைகளை முதலமைச்சர் செய்துள்ளார்கள்.

இவை அனைத்தையும் நேரில் பார்க்கும் மக்கள், மனமுவந்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் மூலமாக கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர முன் வந்துள்ளார்கள். இரண்டு கோடிப் பேரை உறுப்பினர் ஆக்கியது, யாரும் செய்யாத சாதனை ஆகும். இது யாராலும் செய்ய முடியாத சாதனை ஆகும்.

இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், கழக ஆட்சியின் மீதும், மாண்புமிகு முதலமைச்சர் மீதும் மக்கள் வைத்துள்ள நல்ல நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது. சாட்சியமாக அமைந்துள்ளது. இந்த நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதே தலைவரின் கட்டளையாகும்.

“உங்கள் அனைவரையும் ஒருமுகமாக நான் பார்க்கிறேன். உங்கள் முகங்களில் நான் உதய சூரியனைப் பார்க்கிறேன். அதனைத் தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத் தான் இருக்கிறது” என்று வெற்றிக்குப் பொறுப்பாளிகளாக உடன்பிறப்புகளை ஆக்கி இருக்கிறார் தலைவர்.

"தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !

“என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026–இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும்” என்பதை திரும்பத் திரும்ப நினைவூட்டி இருக்கிறார். அப்படியானால் அடுத்து வரப் போகும் ஒவ்வொரு நாளும் இதே இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

தமிழ்நாடு இப்போது சமூக, அரசியல், பொருளாதாரப் படையெடுப்பைச் சந்தித்து வருகிறது. அதில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்கவே தலைவர் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்கள்.

2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அ.தி.மு.க. கூட்டத்தில் இருந்து மீட்ட தேர்தல் என்றும், 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பா.ஜ.க. – அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாக்கும் தேர்தல் என்றும் உருவகப்படுத்தி இருப்பதுதான், எதிர்வரும் தேர்தலில் மனதில் கொள்ள வேண்டிய அரசியல் ஆகும்.

“ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்” என்பதே இறுதியான உறுதியான இலக்கு ஆகும்.

தலைவரின் கட்டளையைக் கண்போல் காத்து செயல்பட உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்றுச் செயல்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories