அரசியல்

பீகாரில் கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்! : சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் ECI அட்டூழியம்!

பீகாரில் ஏற்கனவே 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையை கேள்விக்குறியாக்கிய தேர்தல் ஆணையம், தற்போது கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகாரில் கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்! : சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் ECI அட்டூழியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.வினர், இனி வரும் காலங்களிலும் தாம்தான் ஆட்சி அமைப்போம் என சற்றும் தயங்காமல் பிரச்சாரம் செய்வதற்கு, அவர்களிடம் இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணம் அல்ல! வாக்கு திருட்டுதான் காரணம் என உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இதுவரை மறைமுகமாக நடந்துவந்த இந்த பா.ஜ.க.வின் வாக்கு திருட்டு நடவடிக்கையை, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெளிப்படையாக உரிய உதாரணங்களுடன் எடுத்துரைத்தார்.

மேலும் ஊடகங்கள் முன்னெடுத்த ஆய்வுகளின் வழி, பீகாரின் கடிஹர் தொகுதியில் அமைந்துள்ள ஒரே வீட்டில் 197 வாக்காளர்கள், 124 வயதில் இளம் வயது வாக்காளர் என பல்வேறு குளறுபடி வாக்காளர் அட்டை விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

இவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், பீகாரில் 10 நாட்களுக்கும் மேலாக வாக்காளர் உரிமைப் பேரணியை மேற்கொண்டு வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

பீகாரில் கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்! : சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் ECI அட்டூழியம்!

இதனையடுத்து, முறைகேடு நடவடிக்கைகள் குறித்து மக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால், அதற்கு பதிலளிக்க இயலாத தேர்தல் ஆணையம் தன்னுடைய வாக்காளர் திருத்த பட்டியலை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பீகாரில் ஏற்கனவே 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையை கேள்விக்குறியாக்கிய தேர்தல் ஆணையம், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) என்கிற பெயரில் தற்போது கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்கள் சரியாக விண்ணப்பத்தை நிரப்பவில்லை என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதே சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் வழிதான், பிகாரின் NDA ஆட்சியில் துணை முதலமைச்சராகவும், பா.ஜ.க மூத்த தலைவராகவும் விளங்கும் விஜய் குமார் சின்ஹாவிற்கு இரு வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பா.ஜ.க சார்பினருக்கு வாக்குகளை அள்ளிக்கொடுப்பதும், பா.ஜ.க சாராதவர்களின் வாக்குகளை பறிப்பதுமான நடவடிக்கைகள் தொடர்வதால் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தை பின்னிருந்து இயக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசிற்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories