அரசியல்

யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!

இந்தியா மீது வரி விதித்த டிரம்பிற்கும், வெளியுறவுக் கொள்கையில் கோட்டைவிடும் பா.ஜ.க அரசிற்கும் தேசிய அளவில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் நட்பு நாடு அமெரிக்கா என தெரிவித்து வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில்தான், இந்தியா மீது 50% வரி விதித்து இந்திய ஏற்றுமதியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அமெரிக்கா.

ரசியா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரசியாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது இந்தியா என குற்றம்சாட்டி, இந்திய பொருட்களுக்கான அமெரிக்க இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்0.

இதுபோன்று, அமெரிக்கா பல நாடுகளுக்கு வரி விதித்து வருகிற வேளையில், வரி விதிப்பிற்கு உள்ளாகும் பிற நாடுகள் பதிலுக்கு அமெரிக்கா மீது வரி விதிப்பை அதிகரித்துள்ளன. எனினும், இந்தியா மட்டும் வரியை குறைக்க முற்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க பருத்திக்கு விதிக்கப்படும் வரிக்கு விலக்களிக்கவும் ஒன்றிய பா.ஜ.க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவ்வேளையில், இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் மீதும், வரியை பொருட்படுத்தாமல் அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்கவும், வரி விதிப்பை மீறி எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கவும் முற்பட்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதும் கடும் குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் எழுந்து வருகின்றன.

யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய வேண்டாம் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது என்றால் அதில் மக்கள் ஆதரவு இடம்பெற வேண்டியது தேவைதான்.

ஆனால், வரி விதிப்பை கடந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க ஒன்றிய அரசு அனுமதிப்பதற்கு காரணம் வேறாக இருந்தால்?

ஆம்! ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய மக்களோ, ஒன்றிய அரசோ பெரும் பயனடையப்போவதில்லை. பயனடையப்போவது பிரதமர் மோடியின் நண்பர் மட்டுமே.

ரசியாவிலிருந்து பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனமான ரிலையன்ஸுன் உரிமையாளர் அம்பானியே அந்த நண்பர்.

இதுபோன்ற சூழலில்தான், செப்டம்பரில் 10 முதல் 20 விழுக்காடு அளவிற்கு, ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை கூட்ட திட்டமிட்டுள்ளது இந்திய எண்ணெய் நிறுவனங்கள்.

இதனால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் பல நட்டத்தை சந்திக்கும் சூழல் அதிகரித்துள்ளது.

நாட்டின் நலனைவிட தனது சொந்த நலன்களை காக்கும் மோடிக்கும், வெளியுறவுக் கொள்கையில் கோட்டைவிடும் ஒன்றிய அரசிற்கும், இந்திய ஏற்றுமதியாளர்களை வஞ்சிக்கும் டிரம்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் நேரம் நெருங்கிவிட்டதாக, இந்திய அளவில் குரல்கள் எழுந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories