அரசியல்

பீகாரைத் தொடர்ந்து அடுத்த மாநிலம்... ஒடிசாவிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஒடிசா மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் மீதான திருத்தம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரைத் தொடர்ந்து அடுத்த மாநிலம்...  ஒடிசாவிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.

பீகாரைத் தொடர்ந்து அடுத்த மாநிலம்...  ஒடிசாவிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீகாரைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் மீதான திருத்தம் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ஒடிசா மாநில தேர்தல் அதிகாரி சந்த் கோபாலன் வாக்காளர் பட்டியல் மீதான தீவிர திருத்தம் செப்டம்பர் முதல் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories