அரசியல்

11.19% வளர்ச்சி... இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிறார் நம் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் உதயநிதி !

வளர்ச்சியை நிலைநாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுகிறார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

11.19% வளர்ச்சி... இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிறார் நம் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் இறுதியாக கலைஞர் ஆட்சிக்காலத்தில் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு 13.12 சதவீத வளர்ச்சியை எட்டியது. அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக சரிந்தது. அதிலும் பழனிசாமியின் ஆட்சியில் இது மோசமான நிலைக்கு சென்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மலர்ந்ததும் தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது. கடந்த 2024 - 25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி 9.69 % என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இதனிடையே , அதனை மறுஆய்வு செய்ததில் கடந்த 2024 - 25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 11.19 % என்று திருத்தி ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது. இதனை குறிப்பிட்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வளர்ச்சியை நிலைநாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

11.19% வளர்ச்சி... இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிறார் நம் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் உதயநிதி !

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் தொலைநோக்குத் திட்டங்களால், 2024-2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் எட்டப்பட்ட இந்த இரட்டை இலக்க வளர்ச்சி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நம் முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் சாத்தியமாகி இருக்கிறது.

எல்லோருக்குமான திட்டங்களின் வழியே வளர்ச்சியின் கரங்கள் அனைத்துத் தரப்பையும் அரவணைப்பதால், முழுமையாக ஜனநாயகப்படுத்தப்பட்ட ஒரு பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.

இதே வேகத்தில் நடைபோட்டால் நிச்சயம் இன்னும் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் முதலமைச்சர் அவர்களின் கனவு நனவாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்வது உத்வேகம் அளிக்கிறது.

மாநில உரிமைகளை மீட்பதில் மட்டுமின்றி வளர்ச்சியை நிலைநாட்டுவதிலும் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.தமிழ்நாடு வளரும்! தமிழ்நாடு வெல்லும் !!"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories