அரசியல்

"சனாதன தர்மம் இந்தியாவை நாசமாக்கிவிட்டது, அதனால்தான் அம்பேத்கர் அதை எதிர்த்தார்"- மஹாராஷ்டிர MLA காட்டம்!

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத் சனாதன தர்மம்தான் இந்தியாவை நாசமாக்கி விட்டது என்று கூறி விமர்சித்துள்ளார்.

"சனாதன தர்மம் இந்தியாவை நாசமாக்கிவிட்டது, அதனால்தான் அம்பேத்கர் அதை எதிர்த்தார்"- மஹாராஷ்டிர MLA காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மலேகான் என்ற நகரில் உள்ள மசூதியில் கடந்த 2006-ம் ஆண்டு குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 36 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பஜ்ரங் தள் அமைபைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் ராணுவ அதிகாரி புரோகித், 3 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க விசாரணை அமைப்புகள் தவறி விட்டதாக கூறி இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த பலரும் சனாதன தர்மத்தை சேர்ந்தவர்கள் இதுபோல செய்யமாட்டார்கள் என்று கூறியிருந்தனர்.

"சனாதன தர்மம் இந்தியாவை நாசமாக்கிவிட்டது, அதனால்தான் அம்பேத்கர் அதை எதிர்த்தார்"- மஹாராஷ்டிர MLA காட்டம்!

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத் சனாதன தர்மம்தான் இந்தியாவை நாசமாக்கி விட்டது என்று கூறி விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "சனாதன தர்மம் என்று எந்த மதமும் இருந்ததில்லை. சனாதன தர்மம்தான் சிவாஜி மன்னரின் முடிசூட்டு விழாவை மறுத்து, சம்பாஜி மன்னரை அவமதித்தது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள்தான் சாவித்ரிபாய் பூலே மீது பசு சாணத்தை வீசி, ஜோதிராவ் பூலேவை படுகொலை செய்ய முயன்றனர்.

இவர்களால்தான் அம்பேத்கரை தண்ணீர் குடிக்கவும், பள்ளியில் சேரவும் அனுமதிக்கவில்லை. அதனால்தான் அம்பேத்கர் சனாதன தர்மத்திற்கு'எதிராகக் கிளர்ந்தெழுந்து அதன் அடக்குமுறை மரபுகளை நிராகரித்தார்.நாங்கள் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் அல்ல, நாங்க இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories