அரசியல்

இதோ ஆபத்து வந்துவிட்டது... ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தயாரா? - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!

இதோ ஆபத்து வந்துவிட்டது... ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தயாரா? - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது விதி. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிபோடப்பட்டது. இதைத்தொடர்ந்து தொற்று பெருமளவு குறைந்ததையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தது.

ஆனால் அதனை ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இந்த சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொகுதி மறுவரையறையை ஒன்றிய பாஜக அரசு நடத்துவதாக செய்திகள் வெளியானது. இப்படி தொகுதி மறுவரையறையை செய்தால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் குறைக்கப்படும். இதன் காரணமாக ஒன்றியத்தில் தென் மாநிலங்களில் குரல் ஒடுக்கப்படும்.

எனவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும் என்று தென் மாநிலங்கள் மற்றும் பாஜக ஆளாத மாநிலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைத்தார். அப்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, "தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார்" என்று அவதூறு பரப்பினார். மேலும் தமிழ்நாடு பாஜகவும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

இதோ ஆபத்து வந்துவிட்டது... ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தயாரா? - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி முதல்கட்டமாக ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் மற்றும் பிற பகுதிகளின் மலைப்பகுதிகள், பனிப்பொழிவு உள்ள இடங்களில் 2026 அக்டோபர் 1 முதல் தொடங்கும் என்றும், மீதமிருக்கும் பகுதிகளுக்கு 2027-ம் ஆண்டு மார்ச் 1 முதல் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியானது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தவாறே அரங்கேறியுள்ளது தென் மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதோ ஆபத்து வந்துவிட்டது... ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தயாரா? - தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!

இதுகுறித்து தயாநிதி மாறன் எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

ஒன்றிய பாஜக அரசின் இந்த சதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக் கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து.

இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் அமித்ஷா அவர்களே!

banner

Related Stories

Related Stories