அரசியல்

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ரத்து! - கோரிக்கைகளை ஏற்பதில் தாமதப்படுத்தும் ஒன்றிய அரசு!

பா.ஜ.க ஆட்சி செய்து வருகிற கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்திய அளவில் வறுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, சுமார் 1.12 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ரத்து! - கோரிக்கைகளை ஏற்பதில் தாமதப்படுத்தும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலக அளவில் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரம் பெற்றில்லாமல் இருப்பினும், மிகப்பெரிய மக்கள் தொகையை பெற்றிருக்கிறது. இதனால், இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து பசியும், பட்டினியும் கூடிக்கொண்டே வருகிறது.

அத்தகைய பசியையும், பட்டினியையும் போக்கும் பணியை, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் செய்துவருகின்றனர். அதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும், விவசாயத்திற்கு தனி பங்கு உள்ளது.

இத்தகைய நிலையில், மக்கள் பசி போக்கும் விவசாயிகளின் நலனிலும், விவசாயத்தின் நலனிலும் கவலைகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு, முதலாளிகளுக்கான அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

பல லட்சம் கோடி கடன்பெற்று, வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்லும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய தயங்காத ஒன்றிய பா.ஜ.க அரசு, விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு, இன்றளவும் மும்முரம் காட்டாமல் இருக்கிறது.

இதனைக் கண்டித்து, பசி போக்கும் விவசாயிகள், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக, குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இப்போராட்டக் களத்தில், உடல் சோர்வால் பல உயிர்கள் போனதும், ஒன்றிய அரசின் பார்வைக்கு தென்படாமலேயே இருக்கிறது.

அதனால்தான், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை தடுத்து நிறுத்துகிறோம் என்ற பெயரில், தாக்குதல் நடத்தி, கண் முன்னே விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை கண்டு ரசிக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ரத்து! - கோரிக்கைகளை ஏற்பதில் தாமதப்படுத்தும் ஒன்றிய அரசு!

இந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை விவசாயிகளை 3 முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமரசப்படாமல் விவசாயிகள் துக்கத்தை தொடரச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.

அந்த தொடர்ச்சி, ஒன்றிய அரசின் மற்றொரு அறிவிப்பால் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. பேச்சுவார்த்தையால் தீர்வு கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகளுக்கு, “மே 4ஆம் நாள் நடத்தப்பட இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது” என்ற பா.ஜ.க.வின் அறிவிப்பே, அந்த அறிவிப்பு.

காலங்கள் கடந்தாலும், கனவுகள் நனவாவதில்லை என்ற இருக்கத்துடன் விவசாயிகள், தங்களது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், பா.ஜ.க ஆட்சி செய்து வருகிற கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்திய அளவில் வறுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, சுமார் 1.12 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக, பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில், விவசாயிகள் தற்கொலை தொடர் ஏறுமுகத்தில் உள்ளது. 2024-ஐ ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் சுமார் 32% அதிகரித்துள்ளது.

இது போன்ற வஞ்சிப்பு நடவடிக்கைகள்தான், பா.ஜ.க ஆட்சியின் சாதனை என இந்திய அளவில் பலரும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories