அரசியல்

CBSE-ல் 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! : கட்டாயக் கல்விக்கு தடையிடும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

“ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால், பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகரிக்கும்” என அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!

CBSE-ல் 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! : கட்டாயக் கல்விக்கு தடையிடும்  ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலகின் பல்வேறு நாடுகள், கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து, கட்டாயக் கல்வி முறையை செயல்படுத்தி வருகின்றன. இதில் இந்தியாவும் ஒன்று.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் படி, 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது. இதனால், இந்திய அளவில் கல்வி விகிதம் ஏற்றம் கண்டுவருகிறது.

குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு, வயிற்று பசியையும், கல்வி பசியையும் தீர்க்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், இன்று இந்திய அளவில் பரவி, முதல் தலைமுறை பட்டதாரிகள் பெருமளவில் உருவாகி வருகின்றனர்.

இச்சாதனை, பல ஆண்டுகால பல்வேறு அடக்குமுறைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட சமூகநீதி மற்றும் சமத்துவ செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே அமைந்துள்ளது. ஆனால், ஒன்றியத்தில் ஆட்சியேற்றிருக்கும் பா.ஜ.க அரசோ, மக்களின் வளர்ச்சியை எண்ணாது, நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

CBSE-ல் 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! : கட்டாயக் கல்விக்கு தடையிடும்  ஒன்றிய பா.ஜ.க அரசு!

அதிலும், கல்வியின் முக்கியத்துவத்தை பின்னுக்கு தள்ளி, மதத்தை முதன்மைப்படுத்தும் நடவடிக்கைகள், பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஏராளமாக அரங்கேறியுள்ளன. மதம் முதன்மைப்படுத்தப்படும் வேளையில், பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் பிரிவினை சார்ந்த கருத்துகளும், காவியும் பரப்பப்படுகின்றன.

இவ்வரிசையில், தற்போது சமூகநீதி பயணத்திற்கு கிடைத்த சாதனையாக விளங்கும் கட்டாயக் கல்வி திட்டத்திற்கு, முட்டுக்கட்டையிடும் நடைமுறைக்கு வித்திட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்தியாவில் அனைவரும் கல்வி கற்கிறார்கள், பொதுவுடைமை பேசுகிறார்கள் என்பதால், ஒன்றிய அரசின் NCERT நிறுவனம், CBSE பள்ளிகளின் பாடத்திட்டங்களில், பிறப்பின் அடிப்படையிலான பிரிவினையை கற்பிக்கிறது.

அனைவரும் சமம் என குழந்தைகளுக்கு கற்பிக்காமல், தாய்மொழியையே மறந்து, சமத்துவமின்மையை கற்றுத்தர அடித்தளம் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதனை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

CBSE-ல் 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! : கட்டாயக் கல்விக்கு தடையிடும்  ஒன்றிய பா.ஜ.க அரசு!

இவ்வேளையில், இந்தியா முழுமையும் 8ஆம் வகுப்புவரை கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் நிலையில், CBSE-ல் பயிலும் 3,5, மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்வழி, நாடளவில் குறைந்துவந்த பள்ளி இடைநிற்றல் விகிதம், மீண்டும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால், பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகரிக்கும்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின் படி கொண்டுவரப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன தேவை என்பது அந்தந்த மாநில மக்களுக்கும், அரசுக்கும்தான் தெரியும், புரியும். இதில் பெரியண்ணன் மனப்பான்மையில், நாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு செயல்படக் கூடாது.

மாணவர்களின் எதிர்காலத்தில், தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக விளையாடும் போது அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும். இந்த நடைமுறையை எதிர்த்து பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories