அரசியல்

இந்த சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமா? : இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை காட்ட தொடங்கிய BJP முதல்வர்!

இஸ்லாமைய மன்னர்களின் பெயர்களை கொண்ட சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமா? என சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ள டெல்லி முதல்வருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்த சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமா? : இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை காட்ட தொடங்கிய BJP முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே கடந்த 10 ஆண்டுகளாக தங்களது செயல்திட்டங்களை வகுத்து வருகிறது. எப்படியாவது சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி, இந்தியாவை இந்து ராஷ்டிரமாகா மாற்ற வேண்டும் என்ற RSS-ன் சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு கொண்டு வரும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டங்களை உடனே பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது. முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ரோகா குப்தா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ABVPல் இவர் மாநில நிர்வாகியாக இருந்ததால், RSS-ன் சித்தாந்தத்தை எப்படியாவது அமல்படுத்துவார் என்பதால்தான் மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது இவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டள்ளது.

பா.ஜ.க தலைமை நினைத்தபடியே, முதலமைச்சர் பதவியில் அமர்ந்த அடுத்தநாளே சிறுபான்மை மக்களுக்கு எதிரான தனது வெறுப்பை ரோகா குப்தா வெளிப்படுத்த துவங்கியுள்ளார். அவரது சமூகவலைதள பதிவு ஒன்றில், ”இந்த சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டுமா?” என பதிவிட்டு அக்பர், பாபர் மன்னர்களின் பெயர்களை கொண்ட சாலைகளின் பெயர் பலகையையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தளை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள இவரது சமூகவலைதள பதிவிற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories