அரசியல்

ஆளுநர் நிச்சயம் அரசு அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் - உச்சநீதிமன்றம் கூறியது என்ன ?

ஆளுநர் நிச்சயம் அரசு அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் - உச்சநீதிமன்றம் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததில் இருந்தே அரசுக்கு இடையூராக இருந்து வருகிறார். குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். இப்படி ஜனநாயக விரோத போக்குடன் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில், "ஆளுநருக்கு என்று தனி அதிகாரங்கள் எதுவும் கிடையாது. அவர் அமைச்சரவையின் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளுக்கு உட்பட்டவர்.ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பாக அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்கள் நடைபெற்ற போது, அம்பேத்கர் அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார். அமைச்சரவையின் குழுவின் முடிவுகளுக்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றால் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று அர்த்தம் "என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், "சட்டப்பேரவை அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என ஆளுநர் முடிவெடுத்து விட்டால், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் சட்டப்பேரவைக்கு மீண்டும் அனுப்பி வைத்தார்" என்று கேள்வி எழுப்பினர்.

ஆளுநர் நிச்சயம் அரசு அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் - உச்சநீதிமன்றம் கூறியது என்ன ?

தொடர்ந்து, "ஆளுநர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அரசு எப்படி தானாகவே புரிந்து கொள்ள முடியும், இதைத்தான் ஆளுநர் செய்யத் தவறியிருக்கிறார். இரண்டாவது முறை ஒரு மசோதாவை அரசு அனுப்பும் போது அதற்கு நிச்சயம் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். ஆனால் மாறாக அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார் அதுதான் எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை?" என்று கூறினர்.

அதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடப்படாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதே போல வழக்கின் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories