அரசியல்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உருட்டுக்கட்டையோடு காத்திருப்பு... சீமான், நாதக-வினர் மீது வழக்கு

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உருட்டுக்கட்டையோடு காத்திருப்பு... சீமான், நாதக-வினர் மீது வழக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் ஒரு முக்கிய கட்சியாக நாம் தமிழர் கட்சியை ஒரு சிலர் பார்த்தாலும், சீமானால் அது மேலும் பாழாகி வருகிறது. சீமான் தனது நாவை கட்டுப்படுத்தாமல் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், அக்கட்சியின் கொள்கையை மீறியும் செயல்பட்டு வருகிறார். இதுவும் போக வாயை திறந்தாலே பொய்யாகவே பேசி வருகிறார். இதற்கு அக்கட்சியினரே பலரும் சீமானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அண்மையில் பெரியாரை அவமரியாதையாகவும் அவதூறாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி சர்ச்சையில் சிக்கினார். பெரியார் குறித்து சீமானின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையிலும், தனது நாவை அடக்கமால் மேலும் அவதூறாக பேசி வந்தார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சீமானின் பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருவதோடு அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உருட்டுக்கட்டையோடு காத்திருப்பு... சீமான், நாதக-வினர் மீது வழக்கு

இதனால் சீமானுக்கு அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்தது. மேலும் பெரியார் குறித்த சீமானின் பேச்சு, அவரை சார்ந்தது என்றும், கட்சிக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்றும் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் பாண்டியன் அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து சீமானின் பேச்சால், நாம் தமிழர் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது. எனினும் பெரியார் குறித்த பேச்சுக்கு சீமான் இதுவரை வருத்தமும் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை.

இந்த சூழலில் கடந்த ஜன.22-ம் தேதி, தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும், சீமானின் உருவபொம்மை எரித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உருட்டுக்கட்டையோடு காத்திருப்பு... சீமான், நாதக-வினர் மீது வழக்கு

இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்புகள் சார்பில் ஆயிரம் பேர் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, பெரியாரிய உணரவாளர்களை தாக்குவதற்காக உருட்டுக்கட்டைகளுடன் நாதகவினர் குவிந்தனர்.

மேலும் தாக்குதல் நடத்துவதற்காக நாதகவை சேர்ந்த ஆண், பெண் என பல நிர்வாகிகள் உருட்டுக்கட்டைகளுடன் இருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில்

சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சீமான் உள்ளிட்ட நாதகவினர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் உருட்டு கட்டைகளுடன் இருந்த 150 ஆண்கள் 30 பெண்கள் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories